வேரும் விழுதுகளும்
Friday, March 28, 2014
Monday, March 17, 2014
ஆலமரம் - எங்கள் குடும்பம்
ஒரு சிறிய ஆரம்ப அறிமுகம்
- நான் வெங்கிடலஷ்மி என்னும் ஸரோஜா. எங்கள் அழகான
குடும்பத்தையும் அதை மிகவும் நேர்த்தியாக நிர்வகித்த என் தந்தை பரமேச்வான் மற்றும்
தாயார் ஜானகி, அவர்களுக்கு தாங்குதலாக இருந்த என் பெரியப்பா,
பெரியம்மா முதலியோரைப் பற்றியும் எழுதும் ஓர் உணர்ச்சி மிகுந்த அனுபவ
கட்டுரை இது. இதை எழுதும் நோக்கமே என் குழந்தைகளும் மற்றும்
இளைய தலைமுறையும் இதைப்படித்து இதிலிருக்கும் நற்பண்புகளையும், ஒற்றுமை, பொறுமை முதலிய நற்பண்புகளையும் கற்றுக்கொள்ள
வேண்டும் என்பதுதான். இதை நன்கு நிறைவேற்ற மரியாதைக்குரிய என்
பெற்றோர் ஸ்ரீபரமேச்வர ஐயரும்.
ஜானகி அம்மாளும் இறைவடிவில் எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டி அவர்களுக்கு
இதை ஸமர்பிக்கிறேன்.
ஸரோஜா
ஸரோஜா
17-05-2011
1.
ஆருத்ரா தரிசனம்
அன்று பெளர்ணமி, மார்கழி மாதம், ஆருத்ரா நக்ஷத்திரம். எல்லா சிவாலயங்களிலும் உதய பூஜையும். அபிஷேகமும்,
ஆருத்ரா தரிசனமும் கோலாகலமாக நடந்துகொண்டிருந்தது. விடிகாலை வேளை. பிரிந்தும் பிரியாமல் இருந்த இரவின் நிழல்,
அம்மா. களியும் கூட்டும். சாம்பாரும். மணக்க மணக்க செய்து கொண்டிருந்தாள்,
நெற்றியில் வட்டமான குங்குமம். தலையில் துண்டால்
கட்டிக்கொண்டு அரக்கப்பரக்க நோன்புக்கு ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தாள்,
அந்த அவசர கோலத்திலும் அம்மாவின் முகத்தில் தெய்வீக அழகு. இத்தனைக்கும் ஒருவிதமான அலங்காரமோ. ஆரம்பரமோ கிடையாது.
வேலை, வேலை ! இதுவே அவள்
மூச்சு. " ஏ, ஸரோஜா கோலம் போட்டு
முடியலையா ? சீக்கிரம் வா, ஸ்வாமிக்கு நைவேத்யம்
செய்து கற்பூரம் காட்டணும். அப்பாவின் ஆயுஷ்ஹோமத்திற்கு வேண்டியதெல்லாம்
ரெடி பண்ணு. வாத்தியார் வந்துடுவார்". இப்படியாக கட்டளைகள் பறந்தன. பூஜை முடிந்து, ராமாவாத்யார் வந்து ஆயுஷ்ஹோமமும் முடிந்தது, அப்பா சாப்பிட்டுவிட்டு
பள்ளிக்கூடம் கிளம்பினார்.
அப்போது அவர் கல்கத்தா பவானிபூரில் உள்ள 'கால்ஸா ஹை ஸ்கூலில் Head Master. நான் National High School-ல் படித்துக் கொண்டிருந்தேன். Chirstmas Vacation ஆனதால் எங்களுக்கு மத்தியானம் ஒரு மணிக்கு, ஸ்பெஷல் class மாத்திரம் தான். அப்பா. போகையில், " மத்யானம் போகும் போது தனியாகப் போகாதே. அன்னபூரணியுடன் போ." என்று சொல்லி விட்டுப் போனார். அப்பாவிற்கு நான் தனியாக போவதில் இஷ்டமில்லை, கண்ணியமும், கண்டிப்பும் மிகுந்த அவர், பாசமும் பரிவும் இருப்பினும் வெளியே காட்டிக்கொள்ள மாட்டார். அதனால் நாங்கள் அனைவருமே அவரிடம் சற்று பயம் கலந்த மரியாதையுடன் தான் நடந்து கொள்வோம். 'நாங்கள் என்றால் யார்? யார்? வருகிறது விடை, அடுத்த அத்தியாயத்தில்,
அப்போது அவர் கல்கத்தா பவானிபூரில் உள்ள 'கால்ஸா ஹை ஸ்கூலில் Head Master. நான் National High School-ல் படித்துக் கொண்டிருந்தேன். Chirstmas Vacation ஆனதால் எங்களுக்கு மத்தியானம் ஒரு மணிக்கு, ஸ்பெஷல் class மாத்திரம் தான். அப்பா. போகையில், " மத்யானம் போகும் போது தனியாகப் போகாதே. அன்னபூரணியுடன் போ." என்று சொல்லி விட்டுப் போனார். அப்பாவிற்கு நான் தனியாக போவதில் இஷ்டமில்லை, கண்ணியமும், கண்டிப்பும் மிகுந்த அவர், பாசமும் பரிவும் இருப்பினும் வெளியே காட்டிக்கொள்ள மாட்டார். அதனால் நாங்கள் அனைவருமே அவரிடம் சற்று பயம் கலந்த மரியாதையுடன் தான் நடந்து கொள்வோம். 'நாங்கள் என்றால் யார்? யார்? வருகிறது விடை, அடுத்த அத்தியாயத்தில்,
2.
பால்காட் லாட்ஜ் - ரங்கூன்
முன்பு, அதாவது
1920 - 50 களில், நம் இந்தியர் அதிலும் தஞ்சாவூர்,
திருச்சி, திருநெல்வேலி, பாலக்காடு முதலிய இடங்களில் இருந்த சிலர் வேலைவாய்ப்பு தேடி கடல்தாண்டி பர்மா,
சிங்கப்பூர், மலேசியா முதலிய இடங்களில்,
ரப்பர் தோட்டங்களிலோ, ரயில்வேயிலோ, பர்மா, கவர்மென்ட் ஆபீஸ்களிலோ சேர்ந்து, அங்கேயே நெடு நாட்கள் தங்கி தங்கள் குடும்பங்களை அமைத்துக் கொண்டனர்.
அத்தகைய குடும்பங்களில் ஒன்று, என் தாத்தா சுப்பிரமணிய
ஐயரின் குடும்பமும். பெரிய குடும்பம். தாத்தாவிற்கு
ஆறு பிள்ளைகளும் மூன்று பெண்களும். கடைசி பெண் மாத்திரம் மிகச்சிறிய
வயதிலேயே இறந்து விட்டதால் அவளைப்பற்றிய விபரங்கள் ரொம்பப் பேருக்குத் தெரியாது.
மூத்தவர் - காளஹஸ்தி - மனைவி மீனுக்ஷி - 3 குழந்தைகள், பெரியவன் மணி என்கிற சுப்ரமணியன்.
இரண்டாவது வெங்கிடலக்ஷ்மி என்ற பொண்ணக்கா. மூன்றாமவள்
விசாலம் என்கிற ஆலா. மீனுக்ஷ பெரியம்மா சின்ன வயதில் நோய்வாய்பட்டு காலமாகிவிட்டதால் பெரியவர்
குழந்தைகளையும் தன்னையும் கவனித்துக்கொள்ள பெரியம்மாவின் மருமகளையே இரண்டாம் தாரமாக
கல்யாணம் செய்து கொண்டார், காலப் போக்கில் இவர்களுக்கு நான்கு
பிள்ளைகள் பிறந்தன. வெங்கட்ராமன் (வெங்கிட்டு),
விச்வநாதன் (அம்பு), கோபால்,
ஹரிஹரன் (குட்டி), குட்டியை
அவன் தாய் கர்ப்பமாயிருந்தபோதே பெரியப்பா காளஹஸ்தி இறைவனடி சேர்ந்தார்.
இப்பொழுது பெரியண்ணா மணியின் மனைவி
அன்னபூரணி 83 வயதில் அந்தக் குடும்பத்தின் மூத்த விழுதாக நிற்கிறார்.
அவர்களுக்கு இரண்டு பெண்களும், இரண்டு பையன்களும்.
பெரிய பையன் துரை, இரண்டாமவன் பாஸ்கர்,
பெரிய பெண் லீலா, இரண்டாமவன் பத்மா.
இரண்டாவதாக பொண்ணாக்காவின் கணவர்
சிவராமையர். ஈங்கூன் 'Waston & Co' வில் வேளையாக இருந்தார். ஷோக்கு பேர்வழி. மடிந்த ஜரிகை, அங்கவஸ்திரமும், காதில் கடுக்கனும், அத்தரும் அவர் வருவதை கட்டியம் கூறும்.
நகைச்சுவை நிறைந்த பேச்சு, எல்லோரிடமும் எளிதாகப்
பழகிவிடும் சுபாவம். இயல்பாக நடக்கும் தன்மை. இவை அவரை இளைஞர் மத்தியில் ஹீரோவாகக் காட்டியது. அவர்
என்றுமே வீட்டின் புது மாப்பிள்ளைதான்! இவர்களுக்கு 4
பிள்ளைகள் ஒரே பெண் 1) கணேசன் 2) ராஜன் (ராஜீகுட்டி) 3) ராமஸ்வாசி (சின்னஸாமி) 4) வேணி 5) மூர்த்தி.
வேணி - என் உயிரான சிநேகிதி. சொந்தத்திலும் மேம்பட்ட பந்தம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக
காலன் அவளை மிகச் சிறிய வயதிலேயே கவர்ந்து சென்றான். எனக்காக
இன்னும் காத்திருப்பாள்!
விசாலம் என்கிற ஆலாக்காவின் கணவர்
க்ருஷ்ணஸாமி. இவர் எங்கள் பெரியம்மாவின் தம்பி. ஒன்று கவனித்தோமானால் எங்கள் குடும்பத்தில் நடந்த எல்லா திருமணங்களுமே உறவில்
நடந்தவையே. ஆலாக்கா மிகவும் புத்திசாலி. ஆனால் சிறுவயதிலேயே திருமணம். குடும்பம், குழந்தைகள் என்று ஆகிவிட்டதால் படிப்பை நிறுத்த வேண்டி வந்தது. ஆனால் ஏழ்மை, குடும்ப சூழ்நிலை, வேலைக்கு சரியாக போகாமல் தொந்தரவு கொடுத்த புருஷன். எல்லாம் சேர்ந்து அவள் உடல்நலம் குன்றி சீக்கிரமே இறைவனடி சேர்ந்தாள்.
அவளுக்கு பிறந்த குழந்தைகளில் ராஜா என்ற பையனும், பாப்பா என்ற பெண்ணுமே பிழைத்தனர். பாப்பா வேணியைப் போலவே
என் உற்ற சிநேகிதி. ஆனால் அவளும் கேடுகெட்ட மனிதன் ஒருவனுக்கு
வாழ்க்கைப்பட்டு சாப்பாட்டில் கொடூரமான அமிலம் கலக்கப்பட்டு சாட்சி இன்மையால் ஒன்றுமே
செய்ய இயலாத நிலையில் தற்கொலை என்ற பெயரில் போய் சேர்ந்தாள். இந்த வரிகளே எழுதுகையில் என் ரத்தம் கொதிக்கிறது. பாரதியாரின்
புதுமைப்பெண் எங்கே
போனாள்? இதுவே பெரியப்பா காளஹஸ்தியின் குடும்பம்.
மூத்த மனைவியின் மூலம்
இரண்டாம் மனைவி - அவர்களும் மீனுக்ஷி! எங்கள் (அதாவது
என் பெற்றோர்கள் கூடவே இருந்ததால் அவரிடம் தனிபாசம் எங்களுக்கு. அவருக்கு 4 பிள்ளைகள் - இவர்கள்
பெயரை எல்லாம் முன்பே எழுதிவிட்டேன். பெரியப்பா இறந்த பிறகு இவர்களே
தனியாக தவிக்க விட மனமில்லாத என் அப்பா அவர்களையும் எங்களுடன் கல்கத்தாவிற்கு அழைத்துக்
கொண்டார். அந்தக் காலத்தில் சகோதர பாசமும், இரக்கமும், தான், தனக்கு என்ற சுயநல
மனப்பான்மை இல்லாமையும் இருந்ததால் இந்த மாதிரி கூட்டு குடும்பங்கள் நிறையவே இருந்தன.
இப்போது தாத்தாவின் மற்ற பிள்ளைகளை
பார்க்கலாம் வாருங்கள்.
3. பால்காட் லாட்ஜ் - 2
தாத்தாவின் இரண்டாவது பிள்ளை கிருஷ்ணன்
என்கிற பெப்பா (பெரியப்பாவின் சுருக்கம்). பெரியம்மா ஸ்ரீதேவி. 3 குழந்தைகள் மீனு பாப்பா
(பெண்கள்), விச்சா (பையன்)
மூன்றாவது பிள்ளை ஹரிஹரன் என்கிற
ஐயண்ணு. குடும்பத்தில் மிகவும் பொறுப்பான, அன்பான பெரியவர். அவரால்தான் இந்தக் குடும்பமே ஒற்றுமையாக
இருந்தது. அவருக்கு இணையாகத்
தோள் கொடுத்து உதவியவர் அவர் மனைவி - 'சின்ன மன்னி' என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட லக்ஷ்மி. இவர்களுக்கு
4 குழந்தைகள். 1) ராஜா 2) துரை 3) சாமி 4) ராஜம்மா,
நான்காவதாக மீனுக்ஷி என்ற பெண்.
மாப்பிள்ளை 'வடமமலை' எனப்படும்
வேங்கடாத்ரி. அவர்களுக்கு நான்கு குழந்தைகள் 1) ஸீதை எனும் ஸீதுக்குட்டி
2) வேதாம்பாள் 3) செல்லப்பா
4) சேஷாத்ரி.
ஐந்தாவது பிள்ளை நாராயணன்.
அவர் மனைவி ராஜலக்ஷ்மி. நாராயணன் மிகவும் அழகானவர்.
பார்த்தால் நிறமும், பேச்சும், நடையும், ஆங்கிலேய துரை மாதிரி இருப்பார். அவருக்கு முதுகில் ஒரு கட்டி வந்து அது எந்த சிகிச்சைக்கும் கேட்காமல் கஷ்டம்
கொடுத்தது. ஒருநாள் புறக்கடையில் உட்கார்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருந்தபோது,
காகம் ஒன்று அதை கொத்தி விட்டது. அதுவே அவரது
மரணத்திற்கு காரணமானது. அவர் காலமாகையில் அவர் மனைவி ஐந்து மாத
கர்பிணி. அதன் பிறகு அவளையும் அவள் குழந்தை ராஜியையும் பார்த்துக்கொண்டதெல்லாம்
என் அப்பாவும், பெரியம்மாவின் தமையனும் தான். குழந்தையை ராஜி என்று அழைத்து சொந்தப்பெண் போல வளர்த்தினார்கள்.
ஆறாவதாக கோந்தை என்றழைக்கப்பட்ட
என் அத்தை அவர் கணவர் பெயர் க்ருஷ்ணய்யர். நல்ல பாட்டு டீச்சர்.
அவருக்கு ஒரே பையன் பிச்சன். அவளைத்தான் என் பெரியப்பா
பெண் தங்கம்மா
திருமணம் செய்து கொண்டார்.
ஏழாவதாக ராமன் என்ற பையன்.
மனைவி கமலா - அவர்களுக்கு 1) சந்தியா 2) தங்கம்மா 3) ராஜா 4) காந்தி 5) அம்புஜா 6) பண்டு
எட்டாவதாக என் தகப்பனார் பரமேச்வரன்.
பெரியோர்களால் குட்டி என்றும் சிறியோர்களால் அன்புடனும் பாசத்துடனும்
குஞ்சப்பா என்றும் அழைக்கப்பட்டவர். குடும்பத்தின் ஒரே பட்டதாரி
B.A.,L.T. பர்மா கவர்மெண்ட்
ஸ்கூலில் ஆசிரியர். இவர் மனைவி ஜானகி. இருவருமே
ஆதர்ச தம்பதி. நெடு நாள் வரை குழந்தை பாக்கியம் இல்லாமலிருந்து
திருமணமாகி 9 வருடங்களுக்குப் பிறகு ஒரு பெண் குழந்தை பிறந்தது.
அது யார் தெரியுமா? ஸரோஜா என்றழைக்கப்பட்ட ஸாக்ஷாத்
நானேதான்! அதுவரை அந்த வீட்டில் இருந்த எல்லா குழந்தைகளுமே அவர்களுடைய
குழந்தைகள் தான்.
4.
மேமியோவின் மகத்துவம்
மேற்சொன்ன மொத்த குடும்பமும்
பரமேச்வரன், ஜானகி, மாமாம்மைஐத் தவிர எல்லோருமே
Palghat Lodge என்று அவர்களால் பெயரிடப்பட்ட பக்கத்து பக்கத்து வீடுகளில்
தங்கள்குடும்ப ஸகிதம் இருந்து வந்தனர். கூட்டுக் குடும்பம் சமையல்
சாப்பாடு ஒரே இடத்தில். படுப்பதற்கு அவரவர் வீட்டிற்கு சென்று
விடுவார்கள். ஒற்றுமையான குடும்பம், எல்லாம்
மாமாம்மையை கேட்டுதான் செய்வார்கள். மாமாமையும் ஒருவரையும் கடிந்து
ஒரு வார்த்தை பேசமாட்டார். முகம் கோனாது எல்லாம் சொல்லிக் கொடுப்பார்.
இந்த Plaghat Lodge கமாயுட் எனும் இடத்தில்
(Rangoon city -லிருந்து 7 மைல் தூரம்)
இன்ஸீன் மாவட்டத்தில் இருந்தது, போக்குவரத்து
பஸ் அல்லது ரயில் மூலம். குடும்பத்தில் எல்லா ஆண்களுமே சம்பாதித்து
அவரவர் குடும்பத்தை கவனித்துக் கொண்டனர். இவையெல்லாவற்றையும்
மேற்பார்வை பார்த்து சமாளித்தவர் 'ஐயண்ணா' என்றழைக்கப்பட்ட ஹரிஹரன். அவருக்கு தோள்கொடுத்து உதவி,
நிதி போராத போது கொடுத்து, பெண்கள் கல்யாணத்தின்
போதெல்லாம் உதவி, குடும்பத்துக்கு ஒரு தூணாக நின்றவர்
'குட்டி' என்கிற பரமேச்வரன். அவருக்கு நெடுநாட்களாக குழந்தை இல்லாததாலும் மாத வரும்படியும் நிறைய என்பதாலும்,
அவர் எல்லா குழந்தைகளையும் தன் குழந்தைகளாக நினைத்ததாலும் குடும்பத்திற்கு
வேண்டிய உதவி செய்ய முடிந்தது. இச்சமயம் அவர் மனைவி ஜானகிலயம்
பற்றி கூறியே ஆக வேண்டும். கணவன் எது செய்தாலும் ஒரு மறுப்பும்
கூறாமல் ஒத்துழைத்த ஸஹதர்மிணி.
ஜானகி. பரமேச்வரனை
மணந்தபோது அவளுக்கு வயது பதினொன்று. அவருக்கு வயது
22. ஜானகியின் அம்மா சாரதா, அப்பா சிவராமக்ருஷ்ணன்,
அவர் தன் தம்பிகளுடன் சேர்ந்து ஹோட்டல்
நடத்திக்கொண்டிருந்தார். அந்தகாலத்தில் பிராமணர்கள்
நடத்தும் ஹோட்டல்கள் மிகவும் கம்மி. அதுவும் இவர்களின் சாப்பாடும்
டிபனும் வீட்டு சுவையோடு இருந்ததால் எப்போதும் கூட்டம்தான். பணம்
நிறையவே புரண்டது. ஜானகிக்கு இரண்டு தங்கைகள். பாப்பா (அன்னபூரணி) அங்கச்சி
(ராஜலக்ஷ்மி, ஒரு தம்பி - அம்பி (சுப்ரமண்யன்). ஜானகியின் சித்தப்பாக்கள் இருவர்.
சாமி, கணபதி. இவர்கள் கூட்டுக்
குடும்பமாக Pyinmana என்னும் இடத்தில் இருந்தனர். ஜானகியின் கல்யாணத்தை மிக விமரிசையாக நடத்தினர். இரண்டு
வருடங்களுக்குப் பிறகு ஜானகி புத்தகம் வந்த பிறகு அவளுடைய தந்தை சிறிது நோய்வாய்ப்பட்டார்.
அதுவே நீடித்து அவருக்கு யமணாகியது. மிக்க வனமாக
இருந்த குடும்பம் கொஞ்சம் கொஞ்சமாக நொடிந்தது. வியாபாரத்தை
பார்த்துக்கொள்ள சரியான ஆளில்லை. அதனால் நஷ்டம், சகோதரர்களிடையில் மனக்கசப்பு. பாகப்பிரிவினையில் ஜானகியின்
அம்மாவின் பங்கு மிகச்சிறியதாகியது. அம்பி படிப்பிற்காக ஜானகியிடம்
மியாங்மியாவிற்கு வந்தாள். ஜானகியின் தாய் தன் கொழுந்தனார்களுடன்
தங்கி சமையலில் உதவிசெய்து எப்படியோ தன் இரண்டு பெண்கள், பாப்பா,
அங்கிச்சியின் திருமணத்தை ஜானகி, பரமேச்வரன் உதவியோடு
நடத்தினாள். இவ்வாறு இருதரப்பு உறவினர்களுக்கும் உதவினர் அந்த
அற்புத தம்பதியினர்.
இப்போது அவர்கள் மியாங்மியாவில்
இருந்த வீட்டை சுற்றிப்பார்போமா? அந்தக் காலத்தில் கவர்மெண்ட்
க்வார்டர் என்பது தனி வீடாகவோ அல்லது ஒரு மாடி வீடாகவோ இருக்கும் - இப்போதைய villa போல, Burma வீடுகள்
பெரும்பாலும் தேக்குமரத்தால் கட்டப்பட்டவை. பரமேச்வரனின் வீடு
ஒரு மாடி வீடு. கீழே பெரிய ரூம்மாதிரி அவசியமில்லாத சாமான்கள்
போட ஒரு பெரிய Storage. அங்கிருந்து மரப்படிகள் ஏறிச்சென்றால்
ஒரு சிறிய Visitor's room. அடுத்தாற்போல் பெரிய Hall
(living room) அதைத்தொட்டாற்போல் இரண்டு பெரிய Bedrooms. அடுத்தது சமயலறை - நல்ல பெரியது. அங்கேயே சாப்பிடலாம். பாத்திரம், துணிகள் துலக்க கீழே தனியாக இடம். மரத்தினால் செய்யப்பட்ட
சுவர்கள் நிலம். கூரை நம்மூர் மாதிரி ஓடு. நிறைய மழை பெய்யும். நிலு நிலமும் சுவரும் பாலிஷ் செய்யப்பட்டு
எப்போதும் பள. பளவென்று மின்னும்.
ஜானகி ரொம்ப படிக்காவிட்டாலும்
(6th) ரொம்ப பகுத்தறிவுடையவள். அவளுக்கு புத்தகங்கள்
படிக்க பிடிக்கும். அதனால் நாட்டு நடப்பு அரசியல் சமூக சீர்த்திருத்தங்கள்
எல்லாம் நன்றாகத்
தெரியும். தையல் கலையில் கெட்டிக்காரி. அந்தக்காலத்தில் நிறைய Frack தைத்து சின்ன குழந்தைகளுக்கு
போட்டு மகிழ்வாள். வீட்டில் இருந்தும் குழந்தைகளுக்கு
'குஞ்சம்மை' என்றால் ரொம்ப பாசம், அன்பு.
பையன்களுக்கு ஸ்கூல் லீவ்விட்டாலே
மியாங்மியா போய் குஞ்சப்பா கூட இருக்க ஆசை. அவர் கூட
tennis, corrom, cards எல்லாம் விளையாடலாம். அவர்கள்
வீட்டில் His Master's Voice - பெரிய கிராமபோன் உண்டு.
அதில் கறுப்பு நிற Plate (ஒலித்தட்டு).
சுற்றவிட்டால் நாம் விரும்பும் பாடல்களைக் கேட்கலாம். பரமேச்வரன் அந்தக் காலத்து பிரபலங்களான கிட்டப்பா. தியாகராஜ
பாகவதர். ப்ருந்தா முக்தா, M.S., G.M.B., DKP முதலியோரின் இசைத்தட்டுகளை வைத்திருந்தார். குஞ்சம்மை
ஜானகி குழந்தைகளுக்கு தின்பதற்கு தினுசு, தினுசாக தின்பண்டங்கள்
செய்து கொடுப்பாள். குழந்தைகளின் குக்ஷிக்கு அளவுண்டா?
இதைத்தவிர ஜானகி கைவேலையிலும் தேர்ந்தவள். Embroidery
Crochet, முத்து வேலை பலவிதமான handwork செய்து
எல்லோருக்கும் பரிசளிப்பாள்.
எல்லோரிடமும் அன்பாக இருக்கும்
குஞ்சப்பா மிகவும் கண்டிப்பானவரும் கூட, எல்லோரும் ஒழுக்கமாகவும்,
மரியாதையுடனும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார், பொய் பேசுவது அறவே பிடிக்காது,
பேசினால் சரியான அடிவிழும் அதனால் எல்லோருக்கும் குஞ்சப்பாவிடம் பாசம்
கலந்த பயம் அல்லது பயம் கலந்த பாசம் இருந்தது,
சில விசேஷங்கள் மியாங்மியாவிலும் கொண்டாடப்பட்டன. அப்போது வீட்டுப் பெரியவர்கள் கமாயூட்டிலிருந்து இங்கு வருவார்கள்,
மாமாமை பெருபாண்மை பரமேச்வரன் கூடத்தான் இருப்பாள். வீட்டில் கல்யாணமோ. பூணுாலோ வந்தால் மாமாமை முன்னதாகவே
புறப்பட்டு கமாயூப் போய்விடுவாள், கமாயூட்டில் ஐயண்ணா பெரியப்பா
தான் தலைவர். ரொம்ப நல்லவர். எல்லோருக்கும்
எப்போதும் உதவ தயாராக இருப்பார். அவர் மனைவி லஷ்மி என்கிற
'சின்னமணி' பெரியம்மாவும், அவருக்கு ஈடாக உழைத்தாள். அவள்தான் கடைசி ஓர்ப்படி ஜானகி
எல்லோரும் அவளுக்கு Assistant.
சமையல் வேலையில் ஒவ்வொருத்தருக்கு
ஒவ்வொரு நாள் Duty அன்று அவர்கள் Main சமையலை கவனித்துக் கொள்ள வேண்டும் மற்றவர்கள், அவர்களுக்கு
உதவ வேண்டும். இவ்வாறாக எல்லோருக்கும் சமையல் கலை நன்றாக வந்ததுமல்லாமல்,
ஒற்றுமை, ஒத்துழைப்பு, சிநேகம்
எல்லாமே நன்கு வளர்ந்தன. இப்படியாக எங்கள் கூட்டுக் குடும்பத்தில்
எவ்வளவோ வருடங்கள் முன்பே Event Management Time Management எல்லாம் அமலுக்கு வநதுவிட்டன.
5) உலகப்போர்
1941ம் வருடம் பல விதங்களிலும்
எங்கள் குடும்பத்தை பாதித்த வருடம் நெடுநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதிருந்த பரமேச்வரன்
ஜானகி தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்தது, அந்தக் குடும்பம்
அடைந்த சந்தோஷத்திற்கு அளவேயில்லை, ஏன் என்றால் அவர்கள் அந்தக்
குழந்தையின் வரவை எதிர்பார்க்கவில்லை, ஜானகிக்கு சாதாரணமாகவே
மாதவிலக்கு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அல்லது எட்டு மாதத்திற்கு ஒருமுறை என்று முறையற்று
வரும். அதை சரிபண்ணிக் கொள்ள, மற்றவர்களிடம்
யோஜனை கேட்க, அவனுக்கும் துணிவில்லை. மற்றவர்களுக்கு
அக்கறையும் இல்லை, இது இப்படி இருக்க ஜானகியின் தங்கை பாப்பா
Bauto (பெளட்டோ) என்றும் இடத்தில் இருந்தவள்.
மூன்றாவது
குழந்தையை நிறைகர்ப்பிணியாக இருந்தாள். அவளுக்கு மூத்த
பிள்ளை ராஜா, இரண்டாமவன் செல்லப்பா, இவர்களுக்கு
உதவியாக இருக்க ஜானகி பெளட்டோ சென்றாள். போன சில நாட்களிலேயே
பாப்பாவிற்கு ஆண் குழந்தை (ஹரி) பிறந்தது,
பிரசவம் பார்க்க வந்த தாயி ஜானகியைப் பார்த்ததுமே அவள் கர்ப்பிணி என்று
சொல்லிவிட்டாள். ஆனால் அவளால் பிரசவ தேதியை சரியாகச் சொல்ல
முடியவில்லை. இந்த இனிய செய்தியை உடனடியாக பரமேச்வரனுக்கு,
பாப்பாவின் கணவர் திரு.கிருஷ்ணன் தெரிவித்தார்.
இச்செய்தியால் எல்லோரையும் விட சந்தோஷமடைந்தவர் மாமாமைதான்.
அவருக்கு ஜானகி, நாட்டுப் பெண் என்பதைவிட பெண்தான்.
பதினொன்று வயதில் அவரிடம் வந்தவள். பெண்ணாகவே
பாசம் காட்டி வந்தாள்,
புரோகிதரை அழைத்து சீமந்தத்திற்கு
நாள் குறிக்கப்பட்டது, உத்தேசமாக எட்டாம் மாதம் என்று நினைத்தனர்.
சித்திரை மாதம், அக்ஷயத் திருதியை ரோஹிணி நக்ஷத்திரம்
கூடிய சுபதினத்தில் சீமந்தம், பரமேச்வரனும் மாமாமையும் மியாங்மியா
திரும்பிவிட்டனர், ஜானகி அவள் தாயாருடன் இரண்டு நாட்கள் முன்னதாக
வருவதாக திட்டம். ஆனால் கடவுளின் திட்டம் வேறு விதமாக இருந்தது.
ஜானகி திரும்புவதாக இருந்த அந்த நாள் அவளுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை,
விட்டுவிட்டு வலி. அவள் தாயார் அவளுக்கு சூடாக
ஜீரகக் கஷாயம் வைத்து தந்தாள். அடுத்த நாள் போகலாம் என்று தீர்மானித்தார்கள்.
ஆனால் அன்று இரவே வலி ரொம்ப ஜாஸ்தி ஆகி தாமியை கூப்பிட்டார்கள்.
அடுத்த நாள் காலை அக்ஷய
த்ருதியை அன்று ஜானகி, பரமேச்வரன் தம்பதியருக்கு
அழகான பெண் குழந்தை பிறந்தாள். அனைவரும் அடைந்த மகிழ்ச்சிக்கு
அளவே இல்லை. பிறக்கும் போதே குழந்தைக்கு நெற்றியில் பச்சையாக
ஒரு பொட்டும் மார்பில் பச்சை நரம்புகள் துளசி போல் படர்ந்திருந்தன. அதனால் மாமை அவள் நம் வீட்டு லக்ஷ்மி என்று பெருமை பொங்கச் சொன்னாள்.
குழந்தை நல்ல சிவப்பு நிறம் பரமேச்வரன் மாதிரியே இருந்தாள். தலை நிறைய சுருட்டை முடி. ஏழாம் நாள் காப்பூ,
பதினொறாம் நாள் புண்ணியாக வசனம், ஜாதகர்ம நாமகரணம்
எல்லாம் நன்றாக நடந்தன. சீமந்தம் பண்ண முடியாததால் குழந்தையை
ஒரு முறத்தில் போட்டு மூடி (பட்டால்) சீமந்த
மந்திரங்களை சுருக்கமாச் சொல்லி முடித்த பின்பே ஜாதகர்மம் போன்ற மற்ற சடங்குகள்.
குழந்தைக்கு மாமாமையின் பெயர் 'வேங்கட லக்ஷ்மி'
என்று வைக்கப்பட்டது. வீட்டின் பெரியவர்களுக்கெல்லாம்
அவள் 'செல்லம்' தான். மற்ற அனைவரும் 'ஸரோஜா' என்று அழைத்தனர்.
வீட்டு மனிதர்களே ஐம்பது பேர் உண்டு. இதைத் தவிர
சிநேகிதர்களும் உண்டு. வீடே கல்யாண களை கட்டியிருந்தது.
ஜானகியின் தாயார் தன் கஷ்ட நிலையிலும் குழந்தைக்கு தங்க செயின்,
வளை, மோதிரம், கொலுசு,
காதுக்கு ஸ்டெட் எல்லாம் கொடுத்தாள். அடுத்த நாளே
வந்தவர்கள் எல்லாம் ஒவ்வொருவராக கிளம்பி அவரவர் வீட்டுக்கு சென்றுவிட்டனர்.
ஜானகியும் குழந்தையையும் 21 நாளானதும் மியாங்மியா
திரும்பின. நாட்கள் ஓடின. மாமாமை பேத்தியை
கொஞ்சுவதிலும் ஆகாரம் கொடுப்பதிலும் பெரும் மகிழ்ச்சி அடைந்தாள். அவளைக் கண்ணனாகவே நினைத்து மடியில் வைத்துக் கொண்டு "கையிலே வெண்ணை சிந்தித்தோ க்ருஷ்ணா கமல மாமுகம் நொந்துதோ? செய்த பாவங்கள் நோந்துதோ க்ருஷ்ணா, துரையே ஓடி வாடா'
என்று பாடுவார்.
6) இரண்டாவது
உலகப் போர் -2
எந்த மகிழ்ச்சியும் நிலையானது இல்லை.
எல்லோருடைய நிம்மதியான வாழ்விலும் மண்ணை வாரிப் போட வந்தது.
இரண்டாவது உலகப்போர்.
அதே வருடம் அதாவது
1941, செப்டம்பர் மாதம்
Germany, Japan, Russia, பிரிட்டன் போன்ற நாடுகளுக்கிடையே துவங்கியது
இரண்டாவது உலகப்போர் Germanyஐ ஆண்ட Hitler மேலும் மேலும் சிறிய நாடுகளைத் தங்கள் வசம் சேர்க்க நினைத்த பேராசையால் ஜப்பான்
போன்ற நாடுகளுடன் கூட்டுச் சேர்த்து Britain முதலிய முன்னேற்றமடைந்த
நாடுகளைத் தாக்க ஆரம்பித்தான். இதனால் பாதிக்கப்பட்ட பல நாடுகளில்
வும் ஒன்று. இந்தப் போர் மனிதர்களின் வாழ்வை அடியோடு புரட்டிப்
போட்டுவிட்டது. அப்படி பாதிக்கப்பட்ட குடும்பங்களில் ஒன்று நம்
'பால்காட் லாட்ஜ்' எப்போது போர் எந்த நேரத்திலும்
வரலாம் என்று தெரிந்துவிட்டதோ Burma Govt. எல்லோருக்கும் எச்சரிக்கை
செய்து அவரவர் நாடுகளுக்கு திருப்பி விடும்படி கேட்டுக் கொண்டது. நிறைய பர்மியர்கள் கிராமங்களிலும் பர்மாவிற்கு வெளியிலும் சென்று அங்கு அகதிகள்
போல வாழ ஆரம்பித்தனர். சொர்க்க பூமியாக இருந்த பர்மா இடுகாடு
போல தோற்றமளித்தது. இந்தியர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவரவர்
குடும்பத்துடன் தாய்நாடு திரும்பினர். முன்னதாகவே புறப்பட்டு
வந்தவர். கொஞ்சம் Plan பண்ணி முக்கியமான
பொருட்களையும் பணம் பத்திரம் முதலியவற்றையும் கொண்டு வந்தனர். இரு நாடுகளிலும். சாப்பாட்டு சாமான்கள், காய்கறி, பழங்கள், அரிசி,
பருப்பு முதலியன விலை ஏறியது. சாமான்கள் பதுக்கி
வைக்கப்பட்டு பிறகு இரு மடங்கு விலையில் விற்கப்பட்டன.
ஒருநாளில் இரண்டு கப்பல்கள் இந்தியாவிற்கு
விடப்பட்டன. ஒன்று சென்னை நோக்கியும் மற்றொன்று சிட்டகாங் துறைமுகத்திற்கும் சென்றன.
சிட்டகாங் சென்றால் அங்கிருந்து கல்கத்தா சென்றுவிடலாம். அப்படியாக நம் 'பால்காட் லாட்ஜின்' பெரும்பாலான பெண்மணிகளும், குழந்தைகளும், ஐயண்ணா, ராமன் முதலிய பெரியவர்களும் இந்தியா சென்று அடைந்து
கோயம்புத்தூரில் வீடு வாங்கி Settle ஆகிவிட்டனர். கடைசியில் குடும்பத்தில் இந்தியா வராமல் மீந்தது யார்? பரமேச்வரன், ஜானகி, மாமாமை,
குழந்தை மற்றும் ஐயண்ணாவின் மூத்த மகன்.......................
காளஹஸ்தியின் மூத்த மகன் மணி, அவன் மனைவி அன்னபூரணி,
குழந்தை, அவனுடைய அக்கா பெண், அவளுடைய 4 குழந்தைகள் இப்படியாக சிலர்.
இதில் கடைசி வரை மீந்து நின்றது
பரமேச்வரன், ஜானகி, மாமாமை, குழந்தை மட்டுமே இது எப்படி ஆயிற்று என்றால் அந்த சமயம் பரமேச்வரனின் பள்ளிக்
கூடத்தில் தேர்வு சமயம். குழந்தைகளுக்கு அது மிக முக்கியமான சமயமானதால்
பரமேச்வரனுக்கு இந்த சமயத்தில் வேலையை அப்படியே போட்டு போக மனசில்லை. கடைசியில் Schoolஐயே பூட்டின பிறகு தான் அவருக்கு தாமும்
புறப்பட்டு போக வேண்டும் என்று தோன்றியது. ஆனால் இந்த ஞானோதயம்
வருவதற்குள் காலம் கடந்துவிட்டது. அவர்கள் போவதாக குறிக்கப்பட்டிருந்த
நாள்தான் கடைசி கப்பல் விடப்பட இருந்தது. ஏகக் கூட்டம் பரமேச்வரன்
எப்படியோ முட்டி மோதி தன் தாயைக் கப்பலினுள் தகுந்த இடத்தில் அமர்த்திவிட்டு ஜானகியையும்
ஏறி வர உதவினார். சைரன் ஊதப்பட்டுவிட்டது. இது கப்பல் புறப்படும் அறிக்கை. கப்பலின் கார்ட் இனிமேல்
ஒருவரையும் உள்ளே போக அனுமதிக்கமாட்டேன் என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார்.
பரமேச்வரன் கையில் குழந்தை கப்பல் நகரத் தொடங்கியது. பரமேச்வரன் ஒரு கணம் திகைத்துப் போய் நின்றார். ஏணிப்படியும்
அகற்றப்பட்டுவிட்டது. மலர்ச்செண்டு போலிருந்த குழந்தையை தூக்கி
கீழிருந்து மேல் நோக்கி கார்டிடம் போட்டார். அவரும் கெட்டியாகப்
பிடித்துக் கொண்டார். கப்பலும் நகர்ந்தது தாய்நாடு நோக்கி
!
7) போரின்
கோர தாண்டவம் - இங்கும் - அங்கும்
இந்நிலையில் பர்மாவில் அடிக்கடி
ஜன்மன் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. மக்கள் பூமிக்குள்
அமைக்கப்பட்டிருந்த சுரங்கப் பாதை (Trenches) க்குள் சென்று பதுங்கிக்
கொண்டனர். போர் விமானங்கள் வரும் முன்பு எச்சரிக்கையாக சைரன் ஒலிக்கப்படும்.
மக்கள் போட்டது போட்டபடி இருக்க Trenches-ல்
மறைந்து கொண்டு உயிர் காத்துக் கொண்டனர். எத்தனைக்கெத்தனை பர்மா
சுபிட்சமான நாடாக இருந்ததோ அத்தனையும் மிகவும் நலிந்த மோசமான கதிக்கு தள்ளப்பட்டது.
British உதவியுடன் நிரம்பவே முன்னேறிய பர்மா இந்த போருக்குப் பின் பழைய
நிலையை அடையவே இல்லை. நம் இந்தியர்கள் பட்ட கஷ்டமோ கொஞ்ச நஞ்சமில்லை.
சென்ற அத்தியாயத்தில் இந்தியா திரும்ப
தாமதமான மணி குடும்பத்தைப் பற்றி எழுதியிருந்தேன். மணி காளஹஷஸ்தி
பெரியப்பாவின் மூத்த மனைவியின் மகன். அவர் மனைவி அன்னபூரணி.
அவர்களுக்கு மூத்த மகன் (துரை) பிறந்து மூன்றே மாதங்களில் இந்தியா திரும்பும் நிலை வந்தது. அன்னபூரணியின் பெற்றோர் கிராமத்தில் இருந்ததால் அவளுடைய பிரசவமெல்லாம் ஜானகி,
பரமேச்வரனின் கண்காணிப்பில் அவர்கள் வீட்டில்தான் நடந்தது. இன்றும் இதைப் பற்றிக் கூறும் போது மன்னிக்கு உணர்ச்சி மிகுந்து கண்களில்
கண்ணீர் பெருகும். 'உன் பெற்றோர் இந்தக் குடும்பத்துக்கு உதவியது
போல் யாராலும் உதவ முடியாது' என்றார்.
அவர்கள் எல்லோருக்கும் இந்தியா
திரும்ப கப்பலுக்கு வந்த போது துறைமுகத்தில் எக்கச்செக்க கூட்டம், குளறுபடி. இந்தியா செல்லும் இரண்டு கடைசி கப்பல்கள் நின்றிருந்தன.
இதைவிட்டால் இனி கப்பல் போக்குவரத்து கிடையாது என்று அறிவிக்கப்பட்டது.
ஒவ்வொரு குடும்பத் தலைவனும் தன் குடும்பத்திற்கு அனுமதிச் சீட்டு வாங்க
க்யூவில் பிரிந்து நின்றான். இதனால் பரமேச்வரன் குடும்பமும் மணியின்
குடும்பமும் தனித்தனியாக பிரிந்துவிட்டன. வீட்டு பெண்களுக்கும்,
குழந்தைகளுக்கும் Ticket வழங்கப்பட்டது.
பாவம், பெண்கள் தனியாக பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமில்லை.
ஜானகி குழந்தை, மாமாமை ஏறிய கப்பல் நேராக மெட்ராஸ்
போகும் என்றார்கள். அதுவும் போய்ச் சேர பத்து நாட்களுக்கு மேலேயே
ஆயிற்று. கைக்குழந்தை, வயதான மாமியார்,
கையில் கொண்டு வந்த ஆகாரங்கள் தீர்ந்துவிட, கடவுளைப்
பிரார்தித்தபடியே வந்து சேர்ந்தாள் ஜானகி.
அன்னபூரணியின் கதியோ அதைவிட மோசம் அவள் கூட மணியின்
அக்கா, பொண்ணக்கா, அவளுடைய ஐந்து குழந்தைகள்
கணேசன், ராஜீகுட்டி, சாமி, வேணி, மூர்த்தி. மூர்த்திக்கு அப்போது
இரண்டு மாதமோ இல்லை மூன்றோ ! அவர்கள் கப்பல் ஏறும் போது கணேசனின்
Pocket-ல் ரூபாய் கட்டை மணியண்ணா திணித்து 'செலவுக்கு
அம்மா கேட்டால் கொடு,' என்றார். ஒரு பெரியவரிடம்
அவர்களை கவனித்துக் கொள்ளச் சொன்னார். இப்படியாக பெண்மணிகளும்,
குழந்தைகளும் பிரிந்து தாய்நாடு செல்ல வீட்டுத் தலைவர்களுக்கும்,
மூத்த பையன்களும் பர்மாவிலேயே தங்கி பிறகு நடந்தே இந்தியா வர நேர்ந்தது.
இந்தக் கப்பல் சென்னை செல்லவில்லை. "சிட்டகாங்"
என்றும் துறைமுகம் (அஸ்ஸாமில் இருப்பது)
சென்றடையும் அங்கிருந்து பயணிகள் பஸ் மூலமாகவோ அல்லது ரயிலிலோ கல்கத்தா
வந்தடையலாம். அன்னபூரணி பதினைந்து நாட்கள் கப்பலில் பயணித்து,
எத்தனையோ கஷ்டங்களை எதிர் கொண்டு ஒரு மாதிரியாக சிட்டகங்க் வந்து சேர்ந்தனர்.
குழந்தைகள் எல்லோருக்கும் உடம்பு சரியில்லை. ஒரே
அஜீரணம். ஜூரம், ஜலதோஷம்.
அங்கிருந்த சில நல்ல மனது படைத்த
செட்டியார்கள் Station பக்கத்திலேயே சின்ன Shed ஒன்று போட்டுக் கொண்டு இந்த மாதிரி ஆதரவற்ற பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் முதலியோருக்கு இலவசமாக சாப்பாடு
வழங்கிக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்த குழந்தைகள் அடைந்த மகிழ்ச்சிக்கு
அளவே இல்லை. பாவம், அவர்கள் சரியான சாப்பாடைப்
பார்த்தே பத்து நாட்கள் ஆகியிருக்கும். வீட்டிலிருந்து கொண்டு
வந்த ஆகாரமெல்லாம் தீர்ந்துவிட்ட நிலையில், ஒவ்வொரு நாள் அவர்கள்
பட்டினியாகவே தூங்க நேர்ந்தது கொடுமை. 'எங்கே தங்கள் உணவை கேட்டுவிடுவார்களோ,
பகிர்ந்து கொள்ள நேருமோ' என்று ஒருவரைப் பார்த்து
ஒருவர் பயந்து ஒதுங்கினர். சாப்பாடு விஷயம் இப்படியிருக்க அன்னபூரணியும்,
பொண்ணாக்காவும் உடுத்திக் கொள்ள இரண்டே புடவைகள் தான் கொண்டு வந்திருந்தனர்.
அவசரத்தில் கிளம்பினார்கள் அல்லவா? அதில் அவர்கள்
உடுத்தியிருந்த புடவை கப்பலில் பத்து நாட்களாக ரொம்பவே அழுக்கும் கப்பல் நீரின் உப்பு
பிசுக்குமாக நலிந்து கிடந்தது. அவர்களுக்கு முதலில் தாங்களும்
குளித்து குழந்தைகளையும் நன்கு குளிப்பாட்டிய பின்பே சாப்பிட முடியும் என்று தோன்றியது. ஆனால் சாப்பாட்டுக்கு நடந்த அடிதடியும் குழந்தைகளின் பசியும் அவர்களை சாப்பாட்டுக்கு
நிலையம் நோக்கி துரத்தியது. கணேசனும், ராஜூகுட்டியும் க்யூவில் நின்று எல்லோருக்கும் சாப்பாடை வாங்கிக் கொடுத்த
பின்பே அவர்களும் சாப்பிட்டனர். அங்கிருந்து இவர்கள் கூட வந்த
பெரியவர் Calcuttaவிற்கு Rail-ற்கு Ticket வாங்கி வர, எல்லோருமாக அடுத்த நாள் இரவு கல்கத்தா வந்து
சேர்ந்தனர். அங்கு அன்னபூரணியின் அத்திம்பேர் பாலக்காட்டிலிருந்து வந்து காத்திருந்தார். அவர்களை, படாபனாவில் தான் தங்கியிருந்த லாட்ஜுக்கு அழைத்துச்
சென்று ஒருநாள் தங்கி பிறகு பாலக்காடு போனார்கள்.
இவ்வாறாக இரண்டாவது உலக யுத்தம்
எல்லோர் வாழ்விலும் கோர தாண்டவம் ஆடியது. ஒன்றாக இருந்த குடும்பங்கள்
சிதறிப் போயின. ராஜா போல் இருந்தவர். ஒரே நாளில் சகலத்தையும் இழந்து பிச்சைக்காரன் ஆனான். ஒவ்வொரு குடும்பங்கள் தலைவனை இழந்து தவித்ததென்றால் இன்னும் சில. பெற்றோரைக் காப்பாற்ற வேண்டிய நிலையிலிருந்த இளைஞர்களை இழந்தன. பசியும், பஞ்சமும் தலைவிரித்தாடியது. அதன் விளைவாக திருட்டு, கொள்ளை, வியாதிகள் என எல்லாம் அழையா விருந்தாளியாக வந்தன. பால்காட்
லாட்ஜ் இவற்றிற்கு விதிவிலக்கு அல்ல. சகோதர்களில் சிலர்,
பாலக்காட்டிலும், கோவையிலும், நுறணி கிராமத்திலும், கல்கத்தாவிலும் Settle ஆனார்கள்.
இதனிடையில் பர்மாவில் மீதமிருந்த
நான்கு பெரியவர்களும் நிறைய இளைஞர்களும் நடந்தே இந்தியா வந்தடைய தீர்மானித்தனர்.
ஏனெனில், போர் குறைந்த கால வரம்பில் நிற்பது போல்
தெரியவில்லை. போர் கப்பல்களும், விமானங்களும்
குண்டு மழை பொழியத் தொடங்கிவிட்டன. British படைகள் எந்நேரமும்
ஜப்பான் மற்றும் ஜெர்மன் படைகளுக்கு எதிரடி கொடுக்கத் தயார் நிலையில் இருந்தன.
எங்கு பார்த்தாலும் போர் ஆயுதங்களும் படைவீரர் தங்கும் கூடாரங்களும்
பரந்து கிடந்தன.
நடந்து வந்தவர்கள் பலர் பரமேச்வரன்.
அய்யண்ணாவின் மகன்..........................துரை
மற்றும் ராமனின் பையன்கள், சந்திரா, காந்தி
பிற்காலத்தில் என் புத்தகத்து மாமாவான அம்பிக்குட்டி மாமா, சங்கு
மாமா, என் மாமனார் மணி ஐயர் இன்னும் பலர் நடந்தே வந்தனர்.
இவர்கள் பட்ட கஷ்டங்களும், துன்பங்களும் கொஞ்ச
நஞ்சமல்ல. இவர்களில் சில இளைஞர்கள் காலரா நோயால் தாக்கப்பட்டு
இறைவனடி சேர்ந்தனர். நினைத்தாலே உடல் நடுங்கும். மிகவும் பயங்கரமான, கோரமான ஓர் நிகழ்ச்சி இந்த உலக மஹா
யுத்தம் !
8) தனிக்குடித்தனம்
பர்மாவிலிருந்து திரும்பிய ஐயண்ணா
(ஹரிஹர ஐயர்) கொஞ்சம் முன் யோஜனையுடன் முதலிலேயே
திரும்பிவிட்டதால் கையில் கொஞ்சம் பணம் இருந்தது. அதிலிருந்து
கொஞ்சம் முதலீடு செய்து கோவை ராஜா Stல் ஒரு நல்ல வீடாக வாங்கிக்
கொண்டு ஆனார். அவர் கூட சின்ன மன்னிப் பெரியம்மா, துரை, சாமி, ராஜம்மா இவர்களும்
இருந்தனர். பெரியம்மாவிற்கு தன் குடும்பத்துடன் தனியாக இருப்பது
இதுவே முதன்முறை. குழந்தைகளைப் பள்ளிக் கூடத்தில் சேர்த்துவிட்டு
ராஜம்மாவிற்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். வீட்டின் பின்
பக்கத்தையெல்லாம் வாடகைக்கு விட்டு முன் பக்கம் இவர்கள் உபயோகித்து வந்தனர்.
இந்தத் தனிமை எல்லாம் கொஞ்ச நாட்களுக்குத்தான். பர்மாவிலிருந்து ஒவ்வொருவராக வரத் தொடங்கினர். ஒவ்வொரு
குடும்பத்துக்கும் வீடு பார்த்துக் கொடுத்து அவரவர்கள் சக்திக்கு ஏற்றவாறு குடும்பம்
அமைத்துக் கொடுப்பதெல்லாம் இந்த தம்பதியின் வேலை. ஐயண்ணாவின்
தாராள மனமும் நல்ல குணமும் யாருக்கும் வராது. யார் வந்து கேட்டாலும்
இல்லை என்று சொல்லமாட்டார். இப்படியாக பரமேச்வரன் மற்றும் அவனுடன்
சென்ற சிலரும் நெடுநாட்கள் கழிந்து ஒருநாள், ஒருவருமே எதிர்பாராத
நேரத்தில் வந்தனர். ஒருவரையும் அடையாளமே தெரியவில்லை.
முகமெல்லாம் தாடியும், நீண்டு வளர்ந்த முடியும்,
சடையும், பிச்சைக்காரர்களைப் போல தெரிந்த அவர்களை
பழைய நிலைக்கு கொண்டு வர நெடுநாட்களாயின.
ஜானகியின் அம்மாவும், அவள் சித்தப்பாக்களும் கொடுவாயூரில் அவர்கள் பூர்வீக வீட்டில் தங்கினர்.
பரமேச்வரன் வந்து சேராததால் ஜானகி குழந்தையுடன் அம்மாவுடன் தங்கினாள்.
அவள் தங்கை பாப்பா, தன் கணவர் க்ருஷ்ணன் மற்றும்
குழந்தைகளுடன் தன் புக்கக ஊரான கருமனசேரியில் தங்கினாள். மூன்றாவது
தங்கை அங்கிச்சிக்கும் கல்யாணமாகிவிட்டது. கணவன் நாராயணன்.
தம்பி அம்பிக்கு படிப்பில் அவ்வளவாக பிடித்தம் இல்லாததால் பத்தாவதுடன்
நிறுத்திக் கொண்டு வேலை தேடிக் கொண்டிருந்தது. அக்கா,
அத்திம்பேருடன் தான் தங்கி இருந்தான். குழந்தை
சரோஜா என்றால் அம்பிக்கு உயிர் 'செல்லம்' என்று அன்பு பொங்கக் கூப்பிடுவான். பெரியவர்கள் எல்லோருமே
அப்படித்தான் கூப்பிடுவார்கள். வீட்டில் எது எப்போது வேண்டும்
- எங்கு கிடைக்கும் எல்லாம் அம்பிக்கு அத்துப்படி மாமாமைக்கு வேளை தவறாது
மருந்து கொடுப்பது படுக்கை விரித்துக் கொடுப்பது எல்லாம் அம்பிதான். எல்லோராலும் விரும்பப்பட்டவன் அம்பி. ஆனால் பரமேச்வரனுக்கு
அவன் இப்படி படிக்காமல் ஊர் சுற்றுவதும் வீட்டு வேலை செய்வதும் பிடிக்கவில்லை.
அவனை நம்பித்தான் அவன் தாய் இந்த வயதிலும் இப்படி மாடாக உழைத்துக் கொண்டிருக்கிறாள்
என்று, எத்தனையோ சொல்லியும், கண்டித்தும்
அவனை மேற்கொண்டு படிக்க வைக்க முயற்சி செய்தார். எல்லாம் செவிடன்
காதில் ஊதிய சங்குதான். கடைசியில் அவன் போக்கிலேயே விட்டு,
டைப்பிங், Short hand, Accountancy முதலியன கற்றுக்
கொள்ள வைத்தார். Bombayல் ஒரு Textile Mill-ல் வேலையும் கிடைத்தது. ஜானகியும், பரமேச்வரனும் அவனுக்கு வேண்டிய துணிமணிகள், காலணிகள்
மற்றும் அத்தியாவசியமான பொருட்களெல்லாம் வாங்கிக் கொடுத்து வழி அனுப்பினர்.
அங்கிச்சியின் கணவன் நாராயணனும்,
பம்பாயில் ஒரு மில்லில் வேலையாக இருந்ததால் அம்பிக்கு போனதும் அங்கு
ஒருவித கஷ்டமும் இருக்கவில்லை. பரமேச்வரனின் அண்ணா ராமனின் குடும்பம்
கோவையிலும், க்ருஷ்ணாவின் குடும்பம் நூறணியிலும், காளஹஸ்தியின் குடும்பம் கோவையிலும் ஒருவர் பின் ஒருவராக Settle ஆனார்கள்.
சிறியவர்களாக இருந்த பையன்களெல்லாம்
வளர்ந்து பெரியவர்களாகி படிப்பு முடித்து வேலை தேடத் தொடங்கினார்கள். வீட்டில் பெண்களுக்கு முறைப்படி சின்ன வயதிலேயே திருமணம் நடந்தது. முக்காலும் சொந்தத்திலேயே அதாவது அத்தைப் பெண், மாமா
பையன் என்று கொடுத்துவிட்டதால் பெரிய சிக்கலொன்றுமில்லை. கல்யாணச்
செலவை ஏற்றுக் கொள்வது பரமேச்வரன் புடவை, நகை என்று வரும் போது
எல்லோருமாக செலவை பங்கு போட்டுக் கொள்வார்கள். இப்படியாக ஐயண்ணா
மேற்பார்வையில் எல்லாம் அமைதியாக நடந்துவிடும். இந்த மாதிரி விஷயங்களில்
கூட்டுக் குடும்ப முறை மிக்க அனுகூலமாக இருந்தது.
9) சலோ
ஸிம்லா (Simla)
பரமேச்வரன் தம்பதியர் அம்மாவுடன்
கொடுவாயூரில் இருக்கத் தொடங்கி கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆகிவிட்டது. Burma Govt. உலகப் போர் காரணமாக
வேலையைவிட்டு தாய்நாடு திரும்ப தேர்ந்தவர்களை திரும்ப வேலைக்கு அழைத்துக் கொள்ளப்
போகிறது என்று ஒரு வதந்தி இருந்தது. எல்லோரும் அந்நன்நாளை எதிர்பார்த்துக்
காத்திருந்தனர். ஆனால் இருந்த ஒரே ஆண் துணையையும் இழந்து குழந்தைகளுடன்
இருந்த பெண்மணிகள் ரொம்பவே சிரமப்பட்டார்கள். அந்த வகையில் காளஹஸ்தி
பெரியப்பாவின் மனைவி மீனாக்ஷி பெரியம்மாவும் ரொம்ப கஷ்டப்பட்டாள். நான்கு பையன்கள் இருப்பினும் இரண்டு பேர் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார்கள்.
மூத்தவன் வெங்கிட்டு இன்டர் படித்தக் கொண்டிருந்தான். அந்த சமயத்தில் என் அப்பா *
பரமேச்வரன்தான் அவர்களுக்கு வேண்டிய உதவியை செய்து கொண்டிருந்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் வெங்கிட்டு
அண்ணாவைப் பற்றி கொஞ்சம் சொல்லியே ஆக வேண்டும். ஒரு மூத்த பிள்ளைக்கு
வேண்டிய அத்தனை பொறுப்பும், பொறுமையும், கண்டிப்பும், கருணையும் மற்றும் நற்குணங்களும் அவரிடம்
இருந்தன. என் அப்பாவிற்கு மிகவும் பிடித்த பையன். பர்மாவை விட்டு கோவை வந்த பின் அவர்கள் ராஜா தெருவிலேயே ஒரு ரூம் வாடகைக்கு
எடுத்துத் தங்கத் தொடங்கினர். வெங்கிட்டு காலேஜிலும்,
அம்பு, கோபால் பள்ளிக் கூடத்திலும் சேர்ந்தனர்.
வெங்கிட்டு படித்துக் கொண்டே டைப்பிங், Short Hand முதலியவை கற்றுத் தேர்ந்தான்.
*இனி என் உறவை வைத்தே பரமேச்வரன்,
ஜானகி மற்றுமுள்ள உறவினர் கூறப்படுவார்கள்.
இடையிடையில் சின்ன வேலைகளில்
Part Time வேலை செய்து கொஞ்சம்
சம்பாதிக்கவும் செய்தார். கடுமையான உழைப்பாளி. எப்படியோ அந்தக் குடும்பமும் சமாளித்துக் கொண்டு வந்தது.
இவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த
நன்நாளும் வந்தது. Burma Govt.லிருந்து என் அப்பா (பரமேச்வரன்) பெரியப்பா (ராமன்)
சித்தப்பா (க்ருஷ்ணன்) முதலியோருக்கு
AG's Office-ல் வேலை கொடுத்து Simlaவில்
Posting என்று Letterல் வந்தது. அப்பாவிற்கு வெங்கிட்டுவைத் தனியாக விட்டு விட்டு பெரிய பொறுப்பையும் சுமத்திவிட்டுப்
போக இஷ்டமில்லை. மேலும் பெரியம்மாவிற்கும், வெங்கிட்டுவிற்கும் இடையே திடீரென்று கோப மிகுதியானால் சண்டை வந்துவிடும்.
அதனால் அவனையும், தன்னுடன் கூட்டிக் கொண்டு போய் அங்கு நல்ல
வேலையில் சேர்த்துவிடலாம் என்று நினைத்தார். பெரியம்மாவிடம் இதைப்
பற்றிப் பேசி அனுமதியும் வாங்கினார்.
என் அம்மாவின் அம்மா தன் மைத்துனர்களுடன்
ஊரிலேயே தங்கிக் கொண்டார். என் மாமா அம்பியும்
Settle-ல் ஒரு காட்டன் மில்லில் வேலை கிடைத்து Settle ஆகிவிட்டார். இப்படியாக ஒவ்வொருவருவரும் அவரவர் குடும்பத்தை
கவனித்துக் கொள்ள தயாரானதும் அப்பாவும் செல்லத் தயாரானார்.
10) வாழ்க்கை
சிம்லா பாரதத்தின் வடகிழக்கு ஓரத்தில்
ஹிமாசல் பிரதேஷ் எனும் இடத்தில் இருக்கும் சிறிய ஊர். வருடத்தில்
பத்து அல்லது பதினொன்று மாதமும், குளிரும், பனியும் மூடிக் கிடக்கும். இந்த ஊர் இயற்கை அழகு மிகுந்தது.
மலைகளும் அவற்றின் முகட்டில் கிரீடம் போல் பனியும் பார்க்க பார்க்க
திகட்டாது. ஆனால் இந்த சுத்தமான குளிரே இந்த ஊரில் தொழில்துறை
முன்னேற விடாமல் செய்தது. இது இப்போது சிறந்த கோடை வாசஸ்தலமாகப்
பிரபலமடைந்துள்ளது. வீடுகளெல்லாம் மிகவும் சாதாரணமாகத்தானிருக்கும்.
கூரைகள் சரிவான Sloping Roofs பணி எளிதாக உருகி
கறைந்து போக இந்த ஏற்பாடு ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு கொஞ்ச தூரம் நடக்க
வேண்டும். சில வீடுகளில் இரண்டு அல்லது மூன்று கூட இருக்கலாம்.
நடுவில் பொதுவான பெரிய காரிடார் இருக்கும். ஆண்கள்
எப்போதும் Pant Shirt குர்தா பத்லூன் இவற்றை அணிவர்.
தலையில் பெரிய தலைப்பாகை. காலில் 'மோஜ்ரா' எனப்படும் அழகான செருப்பு. பெண்கள் போடுவது Salwar Kameez குளிர் காலத்தில் எல்லோருமே
Sweater Showl, Coat, Socks, Gloves என்று கம்பளி ஆடைகளை அணிவர்.
வீடுகளில் எப்போதுமே ஒரு நடு இடத்தில் நெருப்பு கனிந்து எரிந்து கொண்டிருக்கும்.
இதை Fire Place என்பர். வீரே
இதனால் சூடாக சுகமாக இருக்கும். குழந்தைகள் நல்ல சிகப்பாக தக்காளியைப்
போல் இருக்கும்.
Simla-வில் மிகவும் பிரசித்தமான
இடம் Mall எனப்படும் கடைத் தெரு. இங்கு
கடைகள், பயணிகள் தங்கும் ஹோட்டல்கள், விளையாட்டு
அரங்கம் மற்றும் தபால் நிலையம் முதலிய முக்கியமான இடங்கள் இருக்கலாம். இங்கு ஹோட்டல்கள், சனி, ஞாயிறுகளில்
எப்போதும் நிரம்பி வழியும். இங்கு வந்து சந்தோஷமாக பொழுது
போக்குவது மக்களின் விருப்பம்.
இங்கு Spring Cross எனும் இடத்தில் என் தகப்பனாருக்கு வீடு கொடுக்கப்பட்டிருந்தது. ஒரே Building-ல் கீழே இரண்டு Flat-களும், மேலே இரண்டு Flat-களும்
இருந்தன. இதைத் தவிர கீழே இரண்டு Garage கார் நிறுத்த கொடுக்கப்பட்டிருந்தன. மேல் மாடியில் ஒரு
Flat-ல் நாங்களும் (நான் அம்மா, அப்பா, வெங்கிட்டு அண்ணா) இன்னொரு
Flat-ல் என் சித்தி பாப்பா, க்ருஷ்ணன் சித்தப்பா
மற்றும் பையன்கள், ராஜா செல்லம் மற்றும் ஹரி இருந்தனர்.
கீழ் வீட்டில் ஒன்றில் என் பெரியப்பா ராமன் அவர்களின் குடும்பமும் மற்றொன்றில்
ஒரு பஞ்சாபிக் குடும்பம் இருந்தது. சிம்லா வாழ்க்கை முற்றிலும்
மாறுபட்டிருந்தது. எப்போதும் குளிர், பனிக்காற்று
வீசியவண்ணம் இருக்கும்
பொழுது விடிவதற்குள் காலை எட்டு மணி ஆகிவிடும். குழாயில் தண்ணீர்
வர வேண்டுமானால் குழாயிலுள்ள ஐஸ் கட்டி உருகி நீராக வெளிவரும். பாத்திரம் தேய்க்க வீடு துடைக்க எல்லாம் வெந்நீரே உபயோகிப்பார்கள்.
வீட்டு வேலைகளை அவரவர்களே செய்து கொள்வார்கள். அங்கு உள்ள மிகப் பெரிய உபாதை குரங்குகளின் அட்டகாசம். ஒவ்வொரு குரங்கும் ஒரு மனிதனைப் போல் உயரமும், தடியுமாக
இருக்கும். நீண்ட வால் சிவந்த முகம். லங்கூர்
என்று சொல்வார்கள். வீட்டில் ஏதாவது கதவோ, ஜன்னலோ மறந்து போய் சாத்தாமல்விட்டால், உள்ளே நுழைந்து
பழம், காய் வகைகளை த்வம்சம் செய்துவிடும். அவற்றை விரட்ட நினைத்தால் நம்மையே திருப்பித் தாக்கும்.
இப்படிப்பட்ட ஒரு குரங்கின் கையில்
மாட்டிக் கொண்டு நான் தவித்த ஒரு சந்தர்ப்பமும் உண்டு. அப்போது
எனக்கு நான்கு வயது இருக்கலாம். மத்தியான வேளையில் அவரவர் வீட்டுக்
காம்பவுண்டிலும், வெயில் காய்ந்து கொண்டு மகளிர்
Sweater பின்னுவது, கைவேலை செய்வது, பட்டாணி உரிப்பது ஆகிய வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். எல்லோரும்
இனிதாக பொழுது போக்கும் நேரம். அன்று அம்மா நிறைய பட்டாணி வாங்கியிருந்தாள்.
என்னிடம் ஒரு சின்ன பாத்திரம் தந்து, பட்டாணியும்
தந்து உரிக்கச் சொன்னாள். நான் இவர்கள் கூட உட்காராமல் சற்று
தள்ளி தனியான இடத்தில் போய் உட்கார்ந்து பட்டாணி உரித்துக் கொண்டிருந்தேன்.
திடீரென்று யாரோ பின்னால் தொட்ட உணர்வு திரும்புகிறேன்
........... பெரிய குரங்கு "அம்மா"'
இந்தச் சத்தம் நாலுபுறமும் எதிரொளிக்க குரங்கு தன் பிடியை இறுக்கி,
பல்லை நறநறவென்று கடித்தது. எல்லோரும் ஓடி வந்தனர்.
என்ன செய்தும் குரங்கை விரட்ட முடியவில்லை. கடைசியில்
கீழ் வீட்டு பஞ்சாபி ஆண்டி ஒரு பெரிய தட்டு நிறைய ரொட்டியும், பழமும் கொண்டு வந்து சற்று தூரத்தில் வைத்துவிட்டு எல்லோரையும் அழைத்துக்
கொண்டு பின்பக்கம் சென்று ஒளிந்து நின்று பார்த்திருந்தாள். அங்கும் இங்கும் பார்த்த குரங்கு தன் பிடியைத் தளர்த்தி என்னை விட்டு விட்டு
ரொட்டியைக் கவ்விக் கொண்டு தாவி ஓடியது. என் அம்மா ஓடி வந்து,
அரை மயக்க நிலையிலிருந்த என்னை அழைத்துச் சொன்னாள். இப்படி பல விதமான சம்பவங்கள் நிறைந்த சிம்லா வாழ்க்கை இரண்டு வருடங்கள் தான்
நீடித்தது.
_
11) கொல்கத்தாவிற்கு மாற்றம்
1945ல் இரண்டாவது உலகப் போர் கொஞ்சம்
கொஞ்சமாக முடிவடைந்தது. Burma,
Japan, France முதலிய இடங்கள் தங்கள் இயல்பு நிலையை அடைய முயற்சியில்
இருந்த AC's Office-ஐ Burma Govt. மூடிவிட
முடிவு செய்தது. முக்கியமான ஆவணங்களை வேகமாக முடிக்க உத்தரவு
வந்தது. எல்லோரும் கூடுதல் நேரம் வேலை செய்து அதை முடித்தனர்.
அந்த மாதக் கடைசியில் Chief Accounts Officer வந்து
எல்லோருக்கும் அவரவர்க்குச் சேர வேண்டிய பணத்தைக் கொடுத்து, அலுவலகத்தின் வேலைகள் இந்தியாவில் முடிந்துவிட்டதால், அதை மூடிவிடப் போவதாகவும் சிலரை பாத்திரம் ரயில்வேஸில்
Select பண்ணியிருப்பதாகவும்
சொன்னார். அவர்கள் Burmaவில் இருந்த போதும்
ரயில்வேயில் இருந்தவர்கள். அப்படி வேலை கிடைத்தவர்களில் என் பெரியப்பா
ராமனும், என் சித்தியின் கணவர் திரு.கிருஷ்ணனும்
உண்டு. அப்பா Govt.Schoolல் வேலையாக இருந்ததால்
அவருக்கு வேலை இல்லை. அதற்கு ஈடாக பணமாகக் கொடுத்தனர்.
வெ.அண்ணாவும் Temporary Staff ஆனதால் வேலை கொடுக்கப்படவில்லை. அவரவர்கள் தங்கள் உத்தியோகத்திற்கும்,
வாழ்க்கை திறனுக்கும் ஏற்ற ஊர்களைத் தேடிச் சென்றனர். அப்பா நிரம்ப யோசித்ததில் இனி கோவைக்கோ அல்லது பாலக்காட்டுக்கோ சென்று
ப்ரயோஜனமில்லை என்று தோன்றியது. அவருடைய அண்ணா ஹரிஹர ஐயரும்,
"வட இந்தியாவைப் போல்
வேலை வாய்ப்பு தென்னிந்தியாவில் கிடையாது. மேலும் சம்பளமும், மிகவும் கம்மியாகத்தான் தருவார்கள்.
நீ கவலைப்படாதே, நான் பார்த்துக் கொள்கிறேன்.
என் மைத்துனன் ராமா சாஸ்த்திரி, கல்கத்தாவில் மிகவும்
பிரபலமான புரோகிதர். நான் அவருக்கு எழுதுகிறேன். அவர் உனக்கு உதவி செய்வார். நீ நல்ல வேலை தேடிக் கொள்
என்று சொன்னார். அவரிடம் அப்பாவிற்கு நிறைந்த மரியாதை.
அதனால் கல்கத்தா செல்ல ஏற்பாடுகள் துரிதமாக நடக்கத் தொடங்கின.
Simlaவிலிருந்து Kalka Mailல் 2 நாட்கள் 15 மணி நேரம் பிரயாணம் செய்து கல்கத்தா வந்து
சேர்ந்தோம். Hourah Stationல் இறங்கி நேராக Taxiல் ராமா சாஸ்திரிகள் வீட்டிற்கு (Deshapriya Park) போய்ச்
சேர்ந்தோம். அவர், மாத்யானம், பரிஹார ஹோமம் முதலியவை செய்து முடித்து எங்களை வரவேற்று பேச வந்தார்.
ஒல்லியான சின்ன சரீரம். காதில் கடுக்கன்,
நெற்றியில் பட்டையான விபூதி, சிரித்த முகம்,
குறைந்த பேச்சு இதுவே ராமவாத்யார். அவர் மனைவி
அம்முகுட்டி மாமி அவருக்க நேரெதிர். எப்போதும் பேச்சு,
வீட்டிலிருக்கும் சிஷ்யர்களை கலாட்டா செய்து கொண்டே இருப்பார்.
என்னை ரொம்பப் பிடிக்கும் 'ரோஸி' என்று கூப்பிடுவார். எல்லாம் நிறைய இருந்தும் தம்பதியருக்கு
குழந்தைச் செல்வம் இல்லை. அவர்கள் வீட்டில் இருந்த பத்து நாட்களுக்குள்
அப்பா வாடகைக்கு வீடு எடுத்துவிட்டார். அந்த பத்து நாட்களுக்குள்
அப்பா வாடகைக்கு வீடு எடுத்துவிட்டார். அந்த பத்து நாட்களும்
அந்த தம்பதி செய்த உதவியை மறக்க முடியாது. அப்பா சொல்வார்.
"தக்க சமயத்தில் தகுந்த மனிதர்கள் மூலம் கடவுள் உதவுவார்"
என்று அந்த வார்த்தைகள் மறக்க முடியாது.
எங்கள் புதிய வீட்டின் முகவரி
17-A, Lake Place, Calcutta-29.அப்பா இந்த முகவரியை எழுதும் போது இப்போதும்
உடலெல்லாமட் புல்லரிக்கிறது' என் வாழ்வில் மறக்க முடியாத என்
வாழ்வி0ல் பல விதங்களிலும் பின்னிப் பிணைந்த என் பிறந்தகம்.
அந்தக் காலத்தில் கல்கத்தாவில் மாடி வீடு என்றால் ஒன்று அல்லது இரண்டு
மாடிக் கட்டிடங்கள்தான். வீடுகள் நல்ல உறுதியாக பெரிய அறைகளுடன்
நல்ல காற்றோட்டமாக நன்றாக இருக்கும். அந்த நாட்களிலும் ஆங்கில
ஆதிகத்தின் கடைசி வாசனை சிறிது இருந்ததால் ஸாரட், குதிரை வண்டி,
ரிக்ஷா முதலியவற்றையும், எஸ்ப்ளனேட் போன்ற ஆங்கிலேயர்
குடியிருப்புகளையும் இன்றும் பார்க்க முடிந்தது. தெருக்கள் மிகவும்
சுத்தமாக இருக்கும் காலை 5 மணி மற்றும் மாலை 3 மணி இரு வேளையும் ஒரு சிப்பந்தி வந்து தெருக்களை தண்ணீர் ஊற்றி கழுவிவிடுவார்.
அதற்கு வேண்டிய கங்கைத் தண்ணீர் பைப் தெருவிள் தகுந்த இடைவெளியில் இருக்கும்.
அதே போல் மாலை 6 மணிக்கு ஒரு கார்ப்பரேஷன் சிப்பந்தி
வந்து தான் கையில் கொண்டு வரும் சிறிய ஏணியில் ஏறி தெரு விளக்குகளை ஏற்றிவிட்டுப்
போவார். அவை அழகான கண்ணாடி கூண்டுகளில் இருக்கும். வண்டிகள் நிதானமாக ஊர்வதே ஓர் அழகு.
பெங்காலி மனிதர்கள் இயல்பாகவே நன்றாகப்
பழகும் தன்மை உடையவர். அதுவும் அவர்களுடைய பாஷை தெரிந்திருப்பவர்களாக
இருந்து அவர்களையும், அவர்களுடைய ஊரையும் கொஞ்சம் புகழ்ந்துவிட்டால்
போதும் என்ன உதவி வேண்டுமானாலும் செய்வார்கள். எங்கள் புது வீட்டுக்காரர்
மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர். அவருடைய முன்னோர் ஜமீன்தார்கள்.
இவர் நன்றாகப் படித்து Police Dept.ல் சேர்ந்து
நன்றாக முன்னேறி நல்ல நிலையில் Retired ஆனவர். அவரும் அவர் மனைவியும் தன் தம்பி குடும்பத்துடன் அவ்வீட்டில் இருந்தனர்.
பெரியவருக்கு குழந்தைகள் இல்லை. அதனால் தம்பியும்,
அவர் குடும்பமுமே தனதுதான் என தீர்மானித்துவவிட்டார். வீடு நல்ல பெரிசு. ஒரு மாடிக் கட்டிடம். கிளிக் கூண்டினைப் போல் வடிவமைக்கப்பட்ட இரண்டு பால்கனிகள் இந்த வீட்டின்
தனித்தன்மை. கீழ் வீட்டின் ஒரு Portionஐ
எங்களுக்கு வாடகைக்கு தந்துவிட்டு மீதமுள்ள பெரிய வீட்டை அவர்களே உபயோகித்தனர்.
எங்கள் Portion முன்பக்கம் பெரிய அதற்கு பக்கத்தில்
சின்ன அறை. இதற்குப் பின்னால் ஒரு ரூம். அதன் வழியாகப் போனால் தண்ணீர் தொட்டி, பாத்ரூம்,
ஒரு சின்ன சமையலறை, பாத்திரம் தேய்க்க துணி தேய்க்க
திறந்த இடம் ஒன்று செளகர்யமாக இருந்தது. வேலைக்காரி வந்து போவதற்கு
பின் பக்கம் தனி வழியும் உண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக வாசலில்
பெரிய திண்ணை. எல்லோருக்குமே அது ரொம்ப செளகர்யம்.
Shopping பண்ண போவோர் வருவோர் அனைவருமே அங்கு உட்கார்ந்து கொஞ்சம்
இளைப்பாறிவிட்டுச் செல்வர். பண்டிகை தினங்களில் அதை நன்கு கழுவி
கோலமிட்டு, அழகு படுத்திப் பார்ப்பது எனக்கு ரொம் பிடித்த வேலை.
அதுவும் கார்த்திகை தீபத்தன்று எங்கள் வீட்டுக் கோல அழகையும்.
விளக்கு அழகையும் புகழாதவர்கள் மிகச் சிலரே. இப்படியான
17-A, Lake Placeன் வாடகை ரூ.50 மட்டுமே.
ஆனால் அந்தக் காலத்தில் அதுவும் அதிகமாகத்தான் தோன்றியது.
12) வேலை வேட்டை
சொன்னபடி மிகச் சிலரையே ல் வேலைக்கு
எடுத்தக் கொண்டனர். மற்றவர்களுக்கு சுமாராக ஒரு தொகை
(அவர்கள் தொண்டுக்கு ஏற்றதே அல்ல) யைக் கொடுத்து
கை கழுவி விட்டனர். அப்பா பாவம். என்ன செய்வது
என்று தெரியாமல் தவித்தார். அவர் கூட வேலை செய்த திரு.பட்டாபிராமன், திரு,தர்மராஜன்,
திரு,ரகுராமய்யர் முதலியோர் அவரவர் ஊர்களில் ஆசிரியர்களாக
இருப்பதைக் கேட்டு அறிந்தார். அவருக்கும் சின்ன வயதிலிருந்தே கல்வி கல்வி கற்பிப்பதில்
மிகுந்த திருப்தி. பணம் சம்பாதிப்பதையே பெரிய குறிக்கோளாகக்
கொள்ளாமல் அறிவு புகட்டுவதைஅய அமலாக நினைந்தார். அந்தக் காலத்தில்
பள்ளி ஆசிரியர்களின் நிலை இந்தியாவில் பரிதாபத்துக்குரியதாக இருந்தது. இருப்பினும் அப்பாவுக்கு அதே பிடித்தது. ஆங்கில இலக்கியம்
அவரிடம் அடிமையானது. Keats, Shelty, Shakespeare முதலிய பிரசித்தமான
எழுத்தாளர்களின் எல்லா கவிதைகளும் அவருக்கு மனப்பாடம். நான் சின்னவனாக
இருந்த போது இந்த கவிதைகளின் சில பகுதிகளைச் சொல்லி அதற்கு அர்த்தமும் சொல்வார்.
அதுவே என் மனதில் கவிதையின் பால் ஓர் ஈர்ப்பை உண்டாக்கியது. அதேபோல், ஆங்கில நாடகங்கள், நாவல்கள்,
சிறுகதைகள் எல்லாமே ரொம்பப் பிடிக்கும். அதனால்
அவர் Lt. பண்ணும் போது ஆங்கில இலக்கியத்தையே ஆக தேர்ந்தெடுத்தார்.
இப்பொழுது தனது நெடுநாளைய ஆசையை நிறைவேற்றிக் கொள்வதற்காக நிறைய பள்ளிக்கூடங்களுக்கு
விண்ணப்பம் செய்தார். கல்கத்தாவில் பிரஸிதமாக இருந்த தென்னிந்தியர்களுக்கான
பள்ளிக்கூடம் "நேஷனல் ஹை ஸ்கூலில்" அழைப்பு விடுத்தார்கள்.
இத்தருணத்தில் ஐப் பற்றி கொஞ்சம்
சொல்ல வேண்டும். இந்தப் பள்ளிக்கூடம் 1911ல் துவங்கப்பட்டது. துவங்கக் காரணமாக இருந்தவர்கள் நம்
தமிழ்நாட்டைச் சேர்ந்த சில பெரியவர்கள். நாள்பட மேலும் மேலும்
தமிழர்கள் சேர்ந்து பள்ளிக்கூடத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு அது படிப்படியாக வளர்ந்து
குழந்தைகளும் எண்ணிக்கையில் அதிகமானார்கள். அந்த நாட்களில் கல்கத்தாவில்
தென்னிந்தியர்கள் ரொம்ப கம்மி. அவர்களும் பரவலாக ஹெளரா,
படாபஜார், டாலிகஞ்ச், பாலிகஞ்ச்,
லேக் மார்கெட் முதலிய இடங்களில் இருந்தார்கள். இவர்கள் ஒன்று கூடும் சந்தர்ப்பமும் கம்மி. இப்படி இருந்தால்
நம் கலாசாரத்தை கல்கத்தாவில் பிரசித்தப்படுத்துவது பெரிய கஷ்டம்தான் என்று பெரியவர்கள்
கருதினார்களள், அதனால் திரு.ராமசுப்ரமணி
ஐயர், திரு.அனந்த பரமேஸ்வர ஐயர்,
திரு.சங்கர ஐயர் போன்ற சில பெரியவர்கள்
"South India Club" என்ற ஒரு அமைப்பைத் துவங்கினார்கள்.
அதில் மேன்மேலும் அங்கத்தினர்கள் பெருகி மாதம் ஒருமுறை நல்ல கச்சேரி
முதலியவை நடத்தப்பட்டன. இதன் மூலம் ஒவ்வொரு மூலையிலும் விலகியிருந்த
தென்னிந்தியர்கள் உல்லோவரும் ஒன்று சேர்ந்தனர். சிறது கால இடைவெளியில்
கல்வியைப் பரப்பும் நோகத்திலுமம் "பாரதி போதனாலயா"
என்ற கல்வி அமைப்பை துவங்கினர். முதலில் ஒரே ஒரு
அறையில் துவங்கப்பட்ட இந்த அமைப்பு நாளடைவில் விரிவாகி ஒரு மாடிக் கட்டிடமாக
"N.R.Iyer Memorial School" என்ற பெயருடன் ரொம்ப பிரசித்தமாகிவிட்டது. முதலில் நம்
தென்னிந்திய மாணவ மாணவியர் மட்டுமே சேர்ந்து படித்து வந்த நிலை மாறி வட மாநிலத்தவரும்
இங்கு கல்வி கற்க வந்தனர். ஏனென்றால் ஆசிரியர்களின் போதிக்கும்
திறன் அவ்வளவு உயர்வாக இருந்தது. ஒவ்வொரு வருடமும்
Ist Division-ல் பாஸ் செய்பவர்கள் நேஷனல் ஹை ஸ்கூல் மாணவர்கள்தான்.
என் அப்பா இங்கு தான் நிறைய வருடங்கள் Maths, English,
History இவற்றிற்கு 9th மற்றும் 10க்கு ஆசிரியராக இருந்தார். அவருடன் வேலை செய்த திரு.ராமசந்திரன், திரு.ராமசுப்ரமணி
ஐயர், திரு.சங்கரன், திரு.நித்யானந்தம், திரு.சுப்ரமணிய ஐயர், திருமதி.லலிதா,
திருமதி.சீதா, திருமதி,சுஜாதா, திருமதி.கமலா ராவ் எல்லோருமே
மிகவும் கற்ற அனுபவமுள்ள ஆசிரியர்களட அந்தக் காலத்தில் கல்வி கற்பிப்பதும்,
கற்பதும் ஒரு புனிதமான செயலாகக் கருதப்பட்டது. இதனால் நேஷனல் ஹை ஸ்கூலின் மாணவர் எண்ணிக்கை கூடிக் கொண்டே போக பழைய ஒரு
மாடி கட்டிடம் நான்கு மாடியுடன் விரிவுப்படுத்தப்பட்டது. சில
நாட்களில் இன்னொரு புது கட்டிடம் Hazra Road-ல் வாங்கி அங்கு
ஆண்கள் Section மாற்றப்பட்டது. இப்படி
Schoolன் பெருமை ஜாஸ்தி ஆக உள்ளே சில பெருச்சாளிகள் (பெரிய மனிதர்கள்) எப்போது எதைச் சுரண்டலாம் என்ற காத்துக்
கிடந்தன. நான்காவது வருடம் முடியும் நிலையில்
Managing Committee Meeting ஒன்று நடந்தது. அதில்
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் அநாவசியமாக எல்லா டீச்சர்களின் சொந்த விஷயத்திலும்
தலையிடத் துவங்கினார். மேலும் முக்கியமாக பரீக்ஷை முடிவுகளில்
கூட அவரது தலையிடல் யாருக்கும் பிடிக்கவில்லை. யார் என்ன சொல்லியும்
அவர் போக்கு மாறவில்லை. எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தது போல் அந்த வருட ஆண்டு பரீக்ஷை முடிவுகள்
வெளிவந்ததும் அவர் அப்பாவைத் தேடி வந்தார். அப்பாவின் கூட அப்போது
சில ஆசிரியர்களும் இருந்தனர். எல்லார் முன்னிலையிலும் அவர் சொல்ல
வந்ததைச் சொல்லலாமென்றும் தனக்கு எல்லோரும் ஒரே போல் வேண்டியோர்த்தான் என்று சொன்னார்.
மிகவும் கோபமடைந்த அந்தப் ப்ரமுகர் தன் பண பலத்தை எல்லாம் விஸ்தாரமாகச்
சொல்லிவிட்டு 'என் போராத காலம் என் பையனை இந்த ல் கொண்டு சேர்த்தேன்.
எவ்வளவோ உயர்வான பள்ளிகள் வருந்தி அழைத்தன. அங்கு
போகாமல் இங்கு வந்து ஒன்றும் தெரியாதவர்களிடம் பேச்சு கேட்கும்படி ஆகிவிட்டது' என்று நொந்து கொண்டார்.
அந்தப் பையன் அந்த வருடம் 3 Term Testகளிலும் ஆங்கிலம்,
கணக்கு, வரலாறு முதலிய பாடங்களில்
Fail. அவன் போக்கும் சரியில்லை. 9th Std. படிக்கும்
ஒரு மாணவன் இப்படி பொறுப்பில்லாமல் நடந்து கொள்வது நல்லதில்லை. ஒரு வருடம் போனாலும் நன்றாகப் படிக்கட்டும் என்று அப்பாவும் மற்ற ஆசிரியர்களும்
எவ்வளவோ சொல்லியும் ஒன்றும் பலனில்லை. அந்தப் பிரமுகர் அப்பா
அந்தப் பையனை எப்படியாவது? தேர்வடையச் செய்ய வேண்டும் இல்லையென்றால்
விளைவுகள் நன்றாக இருக்காது என்று பயமுறுத்தினார். ஆனால் அப்பா
இதற்கெல்லாம் மசிபவரா? அடுத்த நாளே முதல் வேலையாக
School வேலையை செய்தார். அவரைத் தொடர்ந்து ரகுராமையர்,
கமலா டீச்சர், சுஜாதா டீச்சர், நித்யாநந்தா முதலானவர்களும் தங்கள் ராஜினாமா கடிதங்களைக் கொடுத்தனர்.
அடுத்த நாள் Managing கமிட்டி மீட்டிங் கூட்டப்பட்டு
ப்ரமுகர் பேசினது பற்றி பெரிய விவாதமே நடந்தது. ஆனால் யாருக்கும்
பண பலத்தை எதிர்த்துப் போராடவோ நியாயத்திற்காக குரல் கொடுக்கவோ துணிவில்லை.
அதனால் அப்பாதான் ராஜினாமாவை திரும்ப பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டார்.
இத்தனைக்கும் அந்த சமயத்தில் குடும்பம் கஷ்ட நிலையில் தான் இருந்தது.
அப்பாவின் நேர்மைக்கும், மன உறுதிக்கும் இச்சம்பவம்
ஒரு உதாரணம்.
13) கஷ்டத்திலும் நேர்மை
அப்பாவின் வேலை வேட்டை மீண்டும்
துவங்கியது. ஆனால் அவருக்கு மனதுக்கு பிடித்த வேலை ஒன்றும் அமையவில்லை.
ஆசிரியர் வேலையைத் தவிர வேறு வேலையைத் தவிர வேறு வேலை ஒன்றும் அவர் மனதுக்கு
திருப்தி அளிக்கவில்லை. ஏனெனில் அவர் விரும்பி
Training எடுத்துக் கொண்டது. அந்த வேலைக்குத்தான்.
வேறு வேலையை ஏற்றுக் கொண்டால் தொழிலுக்கு வேண்டிய நியாயமான உழைப்பைத்
தர இயலாது என்று நினைத்தார். கல்கத்தாவில் ஆங்கில மீடியம் பள்ளிக்கூடங்கள்
குறைவு. அதனால் அவருக்கு வேலை கிடைப்பது இன்னும் கஷ்டமாகியது.
இந்நிலையில் வெங்கிட்டு அண்ணாவிற்கு
ஆங்கிலேயக் கம்பெனி ஒன்றில்
அக்கெளண்ட் தரப்பில் வேலை கிடைத்தது. அவர், காலையில் வேலைக்குச் சென்றால் மாலை 5.30 மணி அளவில் திரும்புவார்.
வந்தடதும் டிபன் சாப்பிட்டவிட்டு Evening College-ல் (City College) B.Com., படிக்கப் பொய் விடுவார்.
திரும்பி வர மணி 9.30 ஆகும். இரவு சாப்பாட்டிற்குப் பிறகு 12 அல்லது 1 மணி வரை படிப்பு. மிகவும் கடினமான உழைப்பாளி.
ஒரு காசு கூட அனாவசியமாகச் செலவுபண்ணமாட்டார். மாதச் சம்பளம் வந்ததும் அப்பாவிடம் கொடுப்பார். அப்பா
ஊரில் இருந்த வெ.அண்ணாவின் அம்மாவிற்கு கனிசமான ஒரு தொகையை அனுப்ப
சொல்லிவிட்டு மீதமுள்ளதை அவருடைய கைச் செலவிற்கு கொடுப்பார். இப்படியே நடந்து வந்தது. வெ.அண்ணாவின்
தம்பி 'அம்பு' என்கிற விச்வநாதனும்
Inter Pass பண்ணி வேலைக்குத் தயாராக இருந்தார். ஆனால் அப்பாவிற்கே வேலையில்லாத போது அவரையும் கூப்பிட்டுக் கொள்ள கொஞ்சம்
தயங்கினார். பிறகு யோஜித்துப் பார்த்து அவரையும் கல்கத்தாவிற்கு
அழைத்துக் கொண்டார்.
அப்பா, அம்பு
அண்ணா இருவருமே வேலை தேடத் தொடங்கினார்கள். அம்பு அண்ணா முதலில்
ஓரிரு சிறிய மார்வாடி ஆபீஸ்களில் Temporary யாக வேலை செய்தார்.
கூடவே B.Com., Class-லும் சேரந்துவிட்டார்.
அப்பாவிற்குதான் வேலை ஒன்றும் சரிப்படவில்லை. Burmaவில் இருந்த போது கூடப் படித்த ஒரு சிநேகிதியிடம் கலந்து ஆலோசித்து திரும்பவும்
செல்லத் தீர்மானித்தார். அச்சமயம் அம்மாவும் காலில் வாத உபாதையினால்
வலியால் ரொம்ப கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாள். அதனால் என்னையும்,
அம்மாவையும் பாலக்காட்டில் கொடுவாயூர் அனுப்ப ஏற்பாடு செய்தார்.
அங்கு என் பாட்டிற்க ஒரு சின்ன வீடு இருந்தது. அதில் பாட்டியின் துணையோடு நாங்கள் இருக்கத் தொடங்கினோம். வெங்கிட்டு அண்ணா அவ்வப் போது எனக்கு வேண்டிய பாடப் புத்தகங்கள், வினாத்தாள்கள் முதலியவற்றை அனுப்பித் தந்தார். பண விஷயமும்
அவர் கண்காணிப்பில்தான் இருந்தது. அப்படியாக அப்பாவின் பிரதிநிதியாகவே
வெ.அண்ணா செயல்பட்டார் என்று சொல்லலாம். என் சித்தி குடும்பமும் ஊரில் இருந்ததால் அம்மாவுக்கு ஒன்றும் கஷ்டமில்லை.
வீட்டில் 'லக்ஷ்மி' என்ற
விசுவாசமுள்ள வேலைக்காரியும் இருந்தாள். கிராமத்து ஜனங்களில்
பாதியும், அம்மாவின் சொந்தக்காரர்கள். எந்த ஒரு விசேஷமோ, பண்டிகையோ எல்லோரும் ஒன்றாகக் கூடி
ஒற்றுமையாக கொண்டாடுவார்கள். கோயமுத்தூர் பக்கமானதால் எங்களுக்கு
அடிக்கடி அங்கு போய் பெரியப்பா, பெரியம்மா, மாமாம்மை, அண்ணாக்கள், ராஜம் அக்கா
எல்லோரையும் பார்க்க முடிந்தது. அவர்கள் வீட்டில் நான்தான் ராணி.
நாட்கள் ஓடின. பர்மா சென்ற அப்பாவிடமிருந்து ஒருவிதமான தகவலும் இல்லை. அந்த சமயம் பர்மாவில் கட்சிப் பூசல் பெரிய சண்டையாக மாறி கம்யூனிஸ்டும்,
ஆளும் கட்சியும் ஒருவரையொருவர் கொடூரமாக கொன்று குவித்துக் கொண்டிருந்தனர்.
அப்பாவிப் பொது மக்களும் இதில் பலியாகினர். அப்பா
அச்சமயம் கம்யூனிஸ்ட் கட்டுப்பாட்டில் இருந்த 'Thazl' என்னும்
இடத்தில் இருந்தார். அது முழுக்க கம்யூனிஸ்ட் பாசறை பலத் தகவல்
எப்போதும் இருந்தது. அப்பா ஒரு பர்மாகாரனைப் போல் ஆடை அணிந்து,
பர்மீஸ் பாஷையில் அங்குள்ளவர்களுடன் பேசிக் கொண்டு எப்படியோ சமாளித்து
வந்தார். Burma Govt.ன் வெளியுறவு மந்திரி...........................அவர் அப்பா கூடப் படித்தவர். நல்ல நண்பர். அவர் Thazi வருகிறார் என்று இந்தப் போராளிகளின் பேச்சிலிருந்து
தெரிந்தது. அவருடன் அப்பா கஷ்டப்பட்டு தொடர்பு கொண்டு தன் நிலையை
விவரித்து தன்னை எப்படியாவது காப்பாற்றும்படி கேட்டுக் கொண்டார். அவரும் அப்பாவை ஒரு ரகசிய இடத்துக்கு வரச் சொல்லி அப்பா ஒரு
Burmese Minister போலவே வேஷம் போட்டு Burmaவிற்கு
அழைத்துச் சென்றுவிட்டார். இதெல்லாம் அப்பா தன்னுடைய இரண்டு
Diary களில் அழகாக கலர், கலரான இங்க்கில் எழுதியிருக்கிறார்.
எனக்கு படித்துக் காட்டி அதை விபரமாக ஒரு படம் பார்ப்பதைப் போல விவரிப்பார்.
ரொம்ப அழகான கவிதையைப் போன்ற ஆங்கில நடை.
கிட்டத்தட்ட 16 மாதங்கள் கடந்துவிட்டன. அம்மா பாவம் நொந்து போய்விட்டார்.
கிராமத்து வம்பர்களுக்கு பதில் சொல்லி மாளவில்லை. வேண்டாத தெய்வமில்லை. அம்மாவின் சிரித்த முகம் சோகமயமாகத்
தெரிந்தது.
ஒருநாள் காலை நான் வீட்டு வாசலில்
என் அத்யந்த சிநேகிதி ராஜியுடன் பாண்டி விளையாட்டிக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு வயதான மனிதர் 'அம்மா செல்லம்' என்று கூப்பிட்டுக் கொண்டே வந்தார். அவவருடைய பழைளூ
பான்ட், அழுக்கான ஷர்ட், தாடி மீசை எல்லாம்
பார்த்த நான் உள்ளே ஓடிப் போய், ஒரு கதவைத் தாழ்ப்பாள் போட்டு
இன்னொன்றின் பின்னால் நின்று 'யாரு'? உங்களுக்கு
யார் வேணும்? என்று கேட்டேன். அந்த மனிதரோ
பதிலொன்றும் சொல்லாமல் நேராக உள்ளே வந்து 'என்னைத் தெரியலையா
கண்ணு' என்று கேட்டுக் கொண்டே ஊஞ்சலில் அமர்ந்து என்னை மடியில்
அமர்த்திக் கொண்டார். முகத்தில் அளவிலாத சோகம். இதற்குள் பேச்சு சப்தம் கேட்டு வெளியே வந்த அம்மா அவரைப் பார்த்தாள்.
ஒரே விநாடிதான் 'நீங்களா'? என்று கேட்டுவிட்டு குலுங்கி அழ ஆரம்பித்துவிட்டாள். என்ன ஆயிற்று உங்களுக்கு? என்று வந்தவரின் கையைப் பிடித்துக்
கொண்டாள். பயந்து ஒதுங்கின என்னை கூப்பிட்டு 'இது உன் அப்பா' 'அப்பா வந்துவிட்டாரம்மா' என்றாள். என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. பக்கத்து வீட்டில் தொடங்கி கிராமம் பூராவும் என் அப்பா வந்துவிட்ட செய்தியைச்
சொல்லிவிட்டு வந்தேன். பர்மா சென்ற அப்பாவிற்கு அவர் நினைத்தது
போல் அரசு வேலை ஒன்றும் கிடைக்கவில்லை. நிலைமை ரொம்ப மாறியிருந்தது.
கடினமான முயற்சிக்குப் பிறகு ஒரு கம்பெனியில் அவர்களுடைய ஒரு கிளையில்
அவர் படிப்பிற்கு சம்பந்தமேயில்லாத வேலை கிடைத்தது. அதிலும் அடிக்கடி
வெளியூர்களுக்கு போய் வர வேண்டி வந்தது. அப்படி ஒரு தடவை
Thazi சென்ற போதுதான் கம்யூனிஸ்ட் கலவரத்தில் மாட்டிக் கொண்டார்.
இரண்டு மாதங்கள் அப்பா எங்களுடன் ஊரில் இருந்தார். அந்த சமயம்தான் என் பெரியப்பா பெண் ராஜம்மாவின் கல்யாணமும் நடந்தது.
ஒரே பெண் என்பதால் ரொம்ப நன்றாகப் பண்ணினார்கள். அடுத்த வருடம் தலை தீபாவளியை தடபுடலாக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.
கொஞ்ச நாட்களாகவே உடல்நலம் சரியில்லாமலிருந்த மாமாம்மை, தீபாவளிக்கு முதல்நாள் சிவலோகப்ராப்தி அடைந்தார். குடும்பத்தின்
மூத்த தலைவியாகவும், எல்லோருக்கும் மிகவும் பிரியமானவளாகவும்
இருந்த மாமாம்மையின் பிரிவு எங்கள் குடும்பத்தை ரொம்பவே பாதித்தது.
14) நேர்மையின் பலன்
மாமாம்மையின் மறைவுக்குப் பிறகு
அப்பாவுக்கு ஊரில் இருக்க பிடிக்கவில்லை, அதனால் கல்கத்தா திரும்ப
நிச்சயம் செய்தார். இந்த சமயத்தில் என் அம்மா இரண்டாவது முறையாக
கர்ப்பமாக இருந்ததால், என்னையும் அம்மாவையும் ஊரிலேயே பாட்டி
விட்டில் விட்டுவிட்டு, அப்பா மாத்திரம் கல்கத்தா சென்றார்.
இது நடந்தது 1949-ல் அதே வருடம் என் ஐயண்ணா பொரியப்பா
சாமியன்ணாவையும் கூட்டிக்கொண்டு கல்கத்தா சென்றார். வேலை வாய்ப்புக்காக
சாமியண்ணாவை அவனுடைய மாமா ராமா வாத்யார் வீட்டில் தங்கச் செய்து, தான் தன் தம்பியுடன் சில நாட்கள் தங்கி விட்டு ஊர் திரும்புவது ஊர் எண்ணம்.
ஆனால் இறைவனின் எண்ணம் வேறு!
அன்று அமாவாசை என் அம்மாவின் உறவினராக
துரைஸாமி ஸாஸ்த்ரி காலை 5 மணிக்கு குளிப்பதற்காக எங்கள் வீட்டிற்கு
வந்தவர் முற்றத்தில் இறங்கியதும் பெரியப்பா அங்கு நெடுஞ்சான் கிடையாக படுத்திருப்பதைப்
பார்த்து
'மாமா'
என்று அலறி விட்டார். அந்த சத்தத்தைக் கேட்டு உள்ளே
படுத்திருந்த அப்பா வெங்கிட்டு அண்ணா, சாமியண்ணா எல்லோரும் ஓடி
வந்து பெரியப்பாவை இயன்ற வரை குடும்ப எழுப்ப முயன்றனர் ஒன்றும் பயனில்லை. டாக்டர் வந்து பார்த்து அவர் இறைவனடி சேர்ந்து பத்து நிமிடங்கள் ஆகியிருக்கலாம்
என்று சொல்லிவிட்டார். அப்பா மிகவும் அதிர்ச்சியும்,
வருத்தமும் அடைந்தார். தந்தையை போல் பாசம் வைத்த
அண்ணா போனது அவருக்கு வலது கையே போனது போல் ஆயிற்று. ஊருக்கு
செய்தி தெரிவிக்கப்பட்டது. மேற்கொண்டு நடக்க வேண்டிய காரியங்கள்
அப்பாவின் தலைமையில் கோயம்புத்தூரில் நடந்தது.
இதனிடையில் அம்மாவிற்கு இரண்டாவதாக
பெண் குழந்தை பிறந்தது. நான்கு மாதங்கள் ஆனதும், அம்மா கல்கத்தா திரும்பி விரும்பினாள். ஊருக்கு வந்து
அப்பாவிடம் தன் எண்ணத்தை சொன்னாள். அப்பாவும் இப்போது
17A Lake Placeல் ஆண்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டதால் சாப்பாட்டிற்கு
கொஞ்சம் சிரமமாக இருப்பதால் அம்மாவை கல்கத்தா வர சம்மதம் தெரிவித்தார்.
இந்த இக்கட்டான சமயத்தில் அப்பாவிற்கு
கல்கத்தாவில் பவானிபூர் என்னுமிடத்தில் உள்ள Khalsa High Schoolல் Asst. Headmaster பதவிற்கு Interview Call
வந்தது. அப்பாவும் அந்த சமயம் மிகவும் கஷ்டமான
நிலையில் இருந்ததால் Interview போக தீர்மானித்தார். அது சீக்கியர்கள் நடத்தும் பள்ளிக்கூடம். சீக்கியர்கள்
மிகுந்த மதப்பற்று மிக்கவர்கள். அவர்கள் மதத்தை சார்ந்த குழந்தைகளையே
அங்கு அனுமதித்தனர். ஆசிரியர்கள் அனைவரும் சீக்கியரும்,
பஞ்சாபியருமே. அப்பாவிற்கு அது மிகவும் ஆச்சர்யமாய்
இருந்தது. அதனால் Interview சென்றதுமே நேராக
செயலாளரிடம் "நான் ஒரு ஹிந்து, ஆனால்
எல்லா மதங்களும் எனக்கு ஒன்றுதான். நீங்கள் நான் ஹிந்து என்று
தெரிந்தும் எப்படி என்னை நேர்முக தேர்விற்கு அழைத்தீர்கள்?" அதற்கு அவர் "நீங்கள் உங்கள் விண்ணப்பத்தில் எக்காரணம்
கொண்டும் என் நேர்மையை விடமாட்டேன்" என்று எழுதியிருந்தது,
"எங்களுக்கு மிகவும் பிடித்தது" என்று
சொன்னார். பிறகு அவர்களுள் கலந்து ஆலோசனை செய்து அப்பாவை உடனடியாக
Asst.Headmaster ஆக நியமனம் செய்தனர். அதற்காக
அவர்களுடைய நெடுநாளைய விதிமுறை ஒன்றையே மாற்ற வேண்டியிருந்தது. இந்த பள்ளி சம்பளம் கொஞ்சம் குறைவாக இருந்த போதிலும் அப்பா அதை ஒப்புக் கொண்டார்.
15) மீண்டும் பள்ளியை நோக்கி
அம்மா என்னையும், என் குட்டி தங்கை சுசீலாவையும் அழைத்துக் கொண்டு கல்கத்தா கிளம்பிவிட்டாள்.
என் பாட்டியை தக்க துணையுடன் Bombayல் என் மாமாவிடம்
அனுப்பினாள். வீட்டிலிருந்து பாத்திரங்களை வீட்டின்
Basementல் இருக்கும் 'அறை' என்று சொல்லப்படும் பெரிய Store Roomல் போட்டு பூட்டினாள்.
அவசியம் இல்லாத பழையதை எல்லாம் விற்று பணமாக்கி பாட்டிக்கு கொடுத்தார்.
அம்மா வந்த காலத்திலேயே ஒரு ஆண் மகனுக்கு உரிய தைரியமும், சுய நம்பிக்கையும் உடையவள். Koduvayur கிராமத்திலிருந்து
Palghot Station வந்தோம்.
அங்கிருந்து மெட்ராஸ் சென்ட்ரல் மெட்ராஸில் காலை 5.00 மணிக்கு வந்துவிடும். அப்பா கூட படித்த
Friend Mr.Gaity எனும் பொன்மணி எங்களை அவர்கள் வீட்டிற்கு அழைத்து செல்ல
Station வந்திருந்தார். அவர்களுக்கு எங்களை பார்த்து
மிகுந்த சந்தோஷம். எங்களை மிக்க நன்றாக கவனித்து கொண்டார்கள்.
சாப்பாடு எல்லாம் முடிந்து கொஞ்சம் Rest எடுத்த
பிறகு கொஞ்சம் சாமான்கள் வாங்க அம்மா அவர்களுடன் கடைக்கு சென்றாள். தங்கை பாப்பாவை என்னிடம் பார்த்துக் கொள்ள சொன்னாள். எனக்கு ரொம்ப பெருமை. இவ்வளவு பொறுப்பான வேலையை கொடுத்துவிட்டார்
என்று. ஆனால் அந்த சந்தோஷம் எல்லாம் கொஞ்ச நேரத்திற்குதான்
என்பது அப்போது தெரியவில்லை !
அம்மா போனதும் நான் கதவை சாற்றிவிட்டு
அந்த அறையிலிருந்த திண்டின் மேல் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
அந்த நேரம் ஒரு குரங்காட்டி வந்து நான் அமர்ந்திருந்த ஜன்னல் பக்கத்தில்
நின்று கொண்டு உடுக்கை அடித்து போவார், வருவார் எல்லாரையும்
கூப்பிட்டுக் கொண்டு இருந்தார். நானும் குரங்கு விளையாட்டை பார்த்துக்
கொண்டு தங்கை பாப்பாவை பற்றி மறந்தே போய்விட்டேன். தூளியிலே
படுத்திருந்த அவள், மெல்ல மெல்ல மேலே வந்து தலையை வெளியே விட்டு
காலை அழுத்த, உடனே முன்பாகம் முழுவதும் வெளியே தொங்கி தலையை
நிலத்தில் இடித்தது. பயத்திலும், வலியிலும்
பெரியதாக அழ ஆரம்பித்துவிட்டாள். தலையில் ஒரு கோலி அளவிற்கு
வீக்கம். எனக்கு ஒரே பயம். அம்மா வந்தால் என்ன சொல்வது?
பாப்பாவின் வலியை எப்படி போக்குவது? கதவு தட்டப்பட்டது.
அம்மாவும், Auntyம் வந்துவிட்டார்கள். பாப்பாவின் சிவந்த கண்களைப் பார்த்ததுமே அம்மா, 'என்னாச்சு?
ஏன் அழுதாள்?' என்று கேட்டுவிட்டு என்னைப் பார்த்து
முழித்தாள். நான் நடந்ததைச் சொன்னதும் 'சரி, போனால் போகட்டும்' என்று
சொல்லிவிட்டு பாப்பாவை தூக்கிக் கொண்டு உள்ளே போய்விட்டாள். இப்படி சின்ன விஷயத்திற்குக் கூட பயப்படும் சுபாவம் இன்னும் என்னிடம் இருக்கிறது.
அடுத்த நாள் காலை நாங்கள் கல்கத்தா
புறப்பட்டோம். 28 மணி நேர பயணத்திற்குப் பின் கல்கத்தா வந்து
சேர்ந்தோம். வண்டியிலிருந்து பார்க்கையில் Hourash
Bridge கம்பீரமாகத் தெரிந்த
போதே ஏதோ நம் சொந்த ஊருக்கு வருவது போல் மனதில் ஒரு சந்தோஷம். அப்பா Stationக்கு வந்து எங்களை அழைத்துச் சென்றார்.
மாலையில் வெங்கிட்டு, அம்பு, சாமி அண்ணாக்கள் எல்லோரும் வந்தார்கள். சுசீலா குட்டிக்கு
ஒரே குஷி எல்லோரையும் உற்று பார்ப்பதும், சிரிப்பதுமாக அக்காவை
முற்றிலும் மறந்துவிட்டாள். ஆனால் சாதம் உட்பட, தூக்கம் பண்ண நான் தான் வேண்டும். இரண்டு நாட்களுக்குப்
பிறகு வெங்கிட்டு அண்ணா என்னை NH Schoolக்கு அழைத்துச் சென்றார்.
அதற்கு முன்னால் கொஞ்சம் reading, writing, dictation முதலியன செய்ய வைத்தார். நான் ஊரிலேயே
regular ஆக எல்லாம் அம்மாவின் கண்டிப்பான மேற்பார்வையில் பண்ணிக் கொண்டிருந்ததால்
கஷ்டமொன்றுமில்லை. Schoolக்குள் நுழைந்ததுமே, என் கால்கள் தந்தியடிக்கத் தொடங்கின. வெங்கிட்டு அண்ணா
என்னை சமாதானப்படுத்தி, ஆசிரியர் கேட்கிற கேள்விகளுக்கு பயப்படாமல்
பதிலளிக்கச் சொன்னார். அப்போ திரு.சுப்பிரமணிய
ஐயர் தலைமை ஆசிரியர். அவரிடம் அண்ணா பேசி என்னைப் பற்றியும் நான்
இன்னாருடைய பெண் என்றும் சொன்னதுமே, 'ஓ ! பரமேச்வர ஐயர் பெண்ணா? கேள்வி, பதில் இதெல்லாம் எதற்கு? பார்த்ததுமே தெரியறதே குழந்தையின்
சுபாவமும் திறமையும்", என்று சொல்லி ஐந்தாவது வகுப்பில்
எடுத்துக் கொள்ளச் சொன்னார். அன்று முதலே பள்ளிக்கூடம் வரலாம்
என்று சொன்னார். ஆனால் புத்தகம் ஒன்றும் இல்லாததால் திங்கள்
முதல் போவதாக தீர்மானம் செய்தோம். அப்பா என்னுடன் வராவிட்டாலும்
நான் அவருடைய பெண் என்று தெரிந்ததுமே எனக்கு அங்கு இடம் கொடுத்தது அந்த
Schoolல் அவருக்கிருந்த நன்மதிப்பையும், மரியாதையும்
காட்டியது. அந்த மதிப்புக்கு பங்கம் வராமல் நடந்து கொள்ள வேண்டும்
என்கிற பொறுப்புணர்ச்சியும் வந்தது.
இப்படி ஆரம்பித்த என் பள்ளி நாட்கள்
1956ல் நான் பத்தாவது பரீக்ஷை எழுதி தேர்வடையும் வரை ஒருவித இடர்களும்
வராமல் கடந்தன. பொன்னான நாட்கள். சிறந்த
ஆசிரியர்கள். அன்பான தோழிகள், இதமான சூழ்நிலை
இவற்றுடன் என் உண்மையான உழைப்பையும் சேர்த்து எனக்கு தக்க பலன் கிடைத்தது. நாங்கள் மேலும், மேலும் படிப்பில் உயர்ந்தோம்.
எங்கள் அன்பான 'நேஷனல் ஹை ஸ்கூல்' 100 வயது கண்டுவிட்டட எங்கள் கல்வித் தாயை, மறக்க முடியுமா?
!
எங்கள் பத்தாவது பரீக்ஷை முடிவுகள்
வெளி வந்து நான் Second Classல் பாஸாகி இருந்தேன். அப்பா, அம்மாவிற்கு ரொம்ப மகிழ்ச்சி ! ஏனென்றால் அந்த சமயம் வீட்டில் ஒரே களேபரம். வெங்கிட்டு
அண்ணாவின் அம்மா, மூன்றாவது தம்பி கோபால், கடைசி பையன் குப்பு எல்லோருமே கல்கத்தாவிற்கு வந்துவிட்டனர். வீட்டில் ஓரிடத்தில் அமைதியாக படிக்கக் கூட இடமில்லை. குட்டியண்ணா என்னைவிட ஒரு வருடம் முன்னால் படித்தான். ஒரு வருடம் இப்படியே இருந்த பின் எங்கள் வீட்டிற்கு பின்பக்கம் ஒரு போர்ஷனுக்கு
அவர்கள் குடி பெயர்ந்தனர்.
அப்பா School நேரம் போக இரண்டு பையன்களுக்கு ட்யூஷனும் எடுத்து வந்தார்.
வீட்டில் எப்போதும் வருவோர் போவோரும், விருந்தாளிகளும்
அதிகம். அதனால் எனக்கு படிக்க கிடைத்த நேரம் குறைவு. மேலும் எனக்கு கை வேலையிலும், பாட்டிலும் இருந்த அளவு
ஆர்வமும் ஈடுபாடும் படிப்பில் இல்லை. அதனால் நான் ஒரு சராசரி
மாணவிதான்.
1954, Sept.13ம் தேதி என் வாழ்வில்
மிக முக்கியமதான சந்தோஷம் நிறைந்த நாள் ! அன்று தான்
"கண்ணன்" என்கிற என் தம்பி சுப்ரமணியன்
பிறந்தான். இதற்கு முன்பு 1950ல் என் தங்கை
சுசீலா பிறந்த போதும் ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஆனால் கூடவே
மனதில் ஒரு பயம். எங்கே அம்மா நம்மை புறக்கணித்து விடுவாளோ என்று.
இப்போது அதெல்லாம் இல்லை. ஒரு தாய்மை உணர்ச்சி.
அம்மா ஆறு மாதங்களாக உதவிக்கு ஒருவரும் இல்லாமல் பட்ட கஷ்டங்களை நினைத்து
ஒவ்வொரு நாளும் கடவுளை வேண்டி நின்ற நினைவுகள். அம்மா தன் சுமையையும்
மறந்து தன் தங்கைக்கு பிரசவம் பார்த்த பண்பு, அன்பு, இவையெல்லாம் என் மனத்தில் பதிந்து அம்மாவுக்கு என்னால் இயன்றவரை உதவி செய்ய
வேண்டும் என்ற உணர்வைத் தந்தன. விளைவு - கண்ணனை நானே முழுக்க முழுக்க பார்த்துக் கொண்டேன். குளிப்பாட்ட,
சாதம் ஊட்ட, தூக்கம் பண்ண எல்லாம் அக்காதான் வேண்டும்.
அப்போது எங்களுடன் எங்கள் பெரியப்பா (கிருஷ்ணன்)
- (பெப்பா) மகன் விச்சாவும் இருந்தான்.
அவனும் கண்ணன் மேல் உயிரையே வைத்திருந்தான். நூறணியில்
வேலைக்கும் போகாமல் படிக்கவும் போகாமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்தவனை அப்பா,
கல்கத்தாவிற்கு கூப்பிட்டு
Short-hand, Typewriting முதலியவை கற்றுக் கொடுத்து ஒரு?
சாதாரண வேலையிலும் சேர்த்தினார். இப்படி அப்பா,
அம்மா தங்களுக்கு இருந்ததோ இல்லையோ சொந்தக்காரர்களுக்கு உதவுவதை குறைக்கவே
இல்லை. இதை எத்தனையோ பேர், பரிகாசமாகவும்,
இடக்காகவும் விமர்சனம் செய்தும், 'என் மகனுக்கு
சரி என்று பட்டதை செய்தேன். வலது கை கொடுப்பது இடது கைக்குத்
தெரியக் கூடாது என்பார். இவ்வகையான அவருடைய வார்த்தைகள் என் காதில்
ஒலித்துக் கொண்டேயிருக்கும். ஆனால் இந்த உலக நடைமுறைக்கு இதெல்லாம்
சரி வருமா? அவரைப் பொறுத்தவரை வந்தன - வரச் செய்தார் !.
_
16) கரடு முரடாண பாதை
வருடங்கள் ஓடின. இயற்கையின் போக்கில் ஒரு மாற்றமும் இல்லை. மனிதர்கள்தான்
மாறிவிட்டர்கள். எல்லோருக்கும் வசதிகள் பெருக ஆசையும் அதிகமாகிவிட்டது.
அதற்கு ஏற்ப சந்தையில் பொருட்களும் அதிகமாயின. மனிதர்களின் வாங்கும் திறனும் பெருகியது. என் சித்தி,
பாப்பாவின் குடும்பம் நாங்கள் இருந்த 17A, Lake Placeன் பின் பக்க மாடியில் (17-B Lake Place) எங்கள் பெரியம்மா
வீட்டு மாடியில் குடி வந்தார்கள். அதற்கு முன்பு அங்கு
Mr.Basu என்கிற பெங்காலி பெரியவர்
குடும்பத்தோடு இருந்து வந்தார். அவர் சொந்த வீடு வாங்கிக் கொண்டு
போய்விடவே அப்பா வீட்டுக்காரரிடம் சிபாரிசு செய்து சித்தப்பா கிருஷ்ணனுக்கு அந்த வீட்டை
ஏற்பாடு செய்தார். பாப்பா சித்தி ரொம்ப பிரியமானவள்.
அவளுக்கு பெண் குழந்தை இல்லை. மூன்று பிள்ளைகள்
ராஜா, செல்லப்பா, ஹரி. இந்த ஹரியை பிரசவிக்கும் போதுதான் என் அம்மாவுக்கு தானும் உண்டாயிருப்பது
தெரிய வந்தது. ஹரி என்னை விட 3 மாதம் பெரியவன்.
சித்தி என்னையும் என் தங்கையையும், தன் பெண்களைப்
போலவே பார்த்துக் கொள்வாள். எங்களுக்கும் அவளிடம் ரொம்ப ஒட்டுதல்.
இன்னமும் அண்ணாக்கள் மூவருமே எங்களை சொந்த தங்கையாகத்தான் நினைக்கிறார்கள்.
இந்தக் காலத்தில் இந்த மாதிரி சொந்த பந்தமும், நட்பும் குறிப்பிடத்தக்கவைதான்.
என் தம்பி கண்ணனும், பள்ளிக்கூடம் செல்லத் தொடங்கினான். என்னுடைய இன்டர்
முடிந்தது. இன்டரில் நல்ல மதிப்பெண்கள் கிடைத்தது. நான் மேற்கொண்டு படிக்க வேண்டாம் என்று அம்மாவும், படிக்க
வைக்கணும் என்று அப்பாவும், நானும் கட்சி சேர்ந்து கொண்டோம்.
அப்பாவுக்கு தன் பெண் குடும்பத்தில் முதல் பட்டதரி ஆக வேண்டும் என்று
ஆசை. எனக்கு அதனுடன் கூட வேலைக்குப் போய் அப்பாவுக்கும் கொஞ்சம்
Help பண்ண வேண்டும் என்று ஆசை. பெண்கள் வேலைக்குப்
போவது அந்தக் காலத்தில் ரொம்பக் குறைவு. அம்மாவுக்கு என்னை
கல்யாணம் செய்து அனுப்பிவிட்டால் ஒரு கடமை காலாகாலத்தில் செய்து முடித்துவிடலாம் என்று
நினைத்தாள். இப்படியாக ஒரு முடிவுக்கும் வரவிடாமல் காலேஜில்
Form கொடுக்கும் கடைசி நாளும் நெருங்கியது. அன்று
என் Friend ராஜி காலையில் காலேஜ் சென்று Form நிரப்பி கொடுத்துவிட்டு வந்தான்.
அப்பாவிடம், 'ஏன் மாமா, ஸரோஜா நல்ல மார்க் வாங்கியிருக்கிறாள்.
நீங்களே பெண்கள் நன்றாக படிக்க வேண்டும் என்ற சொல்வீர்களே? இப்போது அவளை மாத்திரம் படிக்க வேண்டாம் என்றால் எப்படி?' என்று கேட்டாள். அவ்வளவு தான்! அப்பா உடனே எழுந்தார். ஷர்ட்டை மாட்டிக் கொண்டு என்னையும்
புறப்படச் சொன்னார். நேராக College Formயை நிரப்பி கொடுத்துவிட்டு
வந்தோம். என் சிநேகிதி ராஜிக்கு மனதால் நன்றி சொன்னேன்.
அப்பாவிற்கு பத்து தரம் நன்றி சொன்னேன். அவர்
சிரித்துக் கொண்டே 'போதும்' என்று சொல்லும்
வரை ! 'இந்த துறையில் நன்றாகப் படித்துத் தேறினால் நீதான் நம்
குடும்பத்தில் முதல் பட்டதாரி' என்று பெருமையாகச் சொன்னார்.
'பெண் கல்வி என் நெடுநாளைய கனவு. அது உன் மூலம்
நிறைவடைய வேண்டும். அதற்காக மற்ற கடமைகளை தள்ளிவிடக் கூடாது.
அம்மாவுக்கு இயன்ற வரை உதவ வேண்டும். எத்தனை பட்டம்,
பதவி வந்தாலும் அதன் பெருமை உனக்கு தலைகனமாக மாறக் கூடாது. இடையில் திருமணத்திற்கு ஏதாவது நல்ல இடம் வந்தால் மாட்டேன் என்று மறுக்க கூடாது.
உன் படிப்பை நல்ல படியாக முடித்துத் தருவது என் பொறுப்பு' என்றும், எல்லாமே சரியாகப்பட்ட எனக்கு கடைசி கன்டிஷன்
கொஞ்சம் நெருடியது. பின்னும் அப்பா பார்த்துக் கொள்வார் என்ற
உறுதியில் சரி என்றேன். வீட்டிற்கு வந்ததும் அம்மா கேசரியுடன்
வரவேற்றாள். 'இந்தா ப்ரஸாதம்' என்று ஹனுமான்
கோயில் குங்குமத்தை இட்டாள். எங்கே அம்மா கோபமாக இருப்பாளோ
என்று பயந்து கொண்டே வந்த எனக்கு Double Surprise ! அம்மாவை 'நல்ல
அம்மா' என்று கட்டிக் கொண்டேன். அம்மா,
அப்பாவை நமஸ்காரம் பண்ணி அவர்களின் நல்லாசியைப் பெற்றுக் கொண்டேன்.
கல்லூரியும் திறந்தது. காலை 6.30க்கு முதல் லெக்சர். சில
நாட்கள் பத்து மணிக்கும், சில நாட்கள் 11 மணிக்கும் முடியும். நடுவில் வகுப்புகள் இல்லாத போது
விளையாடவோ அல்லது லைப்ரரியில் படிக்கவோ செல்வோம். கல்லூரியின்
ஒவ்வொரு நாளையும் நான் மிகவும் ரசித்தேன். ஆசிரியர்கள் அனைவலரும்
ரொம்ப நல்லவர்கள். அது?வம் என்னுடைய
Botany Prof.Mrs.Ukkuruவை மறக்கவே முடியாது. அவர்
ஒரு நடமாடும் நூலகம். எந்த சந்தேகத்திற்கும், கேள்விக்கும் உடனடி பதில் அவரிம் இருக்கும். நமக்கு சந்தேகம்
விலகி பதில் நன்றாகப் புரியும் வரை விடமாட்டார். எனக்கு
Botany (தாவரவியல்)ல் மிகுந்த ஈடுபாடு.
அதில் நிறைய மதிப்பெண்கள் பெற்று வந்தேன். மற்ற
பாடங்களில் சராசரி 526 வரும். வீட்டில்
வேலையும் மற்ற சில பொறுப்புகளும் இருந்தன. அம்மா 'இதை முடித்துவிட்டு மீதி நேரத்தில் படி, அது போதும்'
என்பாள். நான் காலேஜ் சென்று படிப்பது பிடிக்காத
சில உறவினர்கள், "எப்படி வளர்ந்துவிட்டாள் பார் இவளுக்கு
பாவாடை, மேலாக்க மினுக்கல் எதுக்கு? புடவையை
வரிந்து கட்டினால் போதாது?" என்று வம்பு பேசுவதை நான் என்
காதால் கேட்டிருக்கிறேன். இன்னும் நெருக்கமான சிலர் ஒரு படி மேலே
போய் - 'பெண்களுக்கு என்ன மேல் படிப்பு? கல்யாணம் பண்ணி அனுப்ப வேண்டியதுதானே ! 'சாதாரண சாப்பாட்டுக்கே
தானம். அதனால்தான் பெண்ணை படிக்க வைத்து வேலைக்கு அனுப்பலாம்
என்று பார்க்கிறார்கள். இவர்கள் போடும் Drama நமக்கு தெரியாதா?" இது இன்னும் சிலர். ஆனால் நல்ல நண்பர்கள் போலும், உறவினர்கள் போலும் நடித்த
இவர்கள் நடுவில் உண்மையான நண்பர்களும் இருந்தனர். இவர்கள் தந்த
உற்சாகத்தினாலும், ஆதரவினாலும் அந்தக் கரடுமுரடான பாதையை கடக்க
முடிந்தது.
17) டும் டும் கல்யாணம்
வருடங்கள் 1958-1961 வரை எங்கள் வீட்டில் நிறைய கல்யாணங்கள். மூத்த மகனான
வெங்கிட்டு அண்ணாவின் கல்யாணம் 1953லேயே நடந்துவிட்டது.
மணமகள் பங்கஜம், அவளுக்கு 3 அண்ணாக்களும், ஒரு அக்காவும். அப்பா
கிடையாது. அண்ணாாதான் கல்யாணம் பண்ணிக் கொடுத்தார். அவர்கள் பவானிப்பூரில் இருந்தனர். பிறகு 1958ல் பெரியசாமி அண்ணாவின் கல்யாணம். சென்னை தாம்பரத்தில்
நடந்தது. மணமகள் சுலோசனா. நன்றாகப் பாடுவாள்.
அவள் பாடும் 'மாமவ் பட்டாபிராமா' இன்னும் காதில் ஒலிக்கிறது. 1959ல் அம்பு அண்ணாவின் கல்யாணம்
ராதாவுடன் மனோகர் புகூர் ரோட், கல்கத்தாவில் நடந்தது.
1960ல் விச்சு அண்ணா ராஜியையும், சி.சாமி வனஜாவையும் மணந்தனர். குடும்பத்தில் வந்த மன்னிகள்
எல்லோரும் நன்றாகவும், அழகாகவும் பேசிப் பழகினார்கள்.
வீடு எப்போதும் கலகலப்பாக இருக்கும். தங்கை சுசீலாவும்
இவர்களுடன் சேர்ந்து கொண்டால் கேட்க வேண்டுமா. ஒரே கும்மாளம்தான்.
ஒவ்வொரு கோடை விடுமுறையிலும்
ஜபல்பூரிலிருந்து என் பெரியப்பா (Narayanan) பெண் ராஜியும் அவள் குழந்தைகளும்
வருவார்கள். அவன் என் மூத்த அக்கா மாதிரி. அப்பா முகத்தையே பார்க்காத குழந்தை என்பதால் என் பெற்றோர் அவளைத்தான் சொந்த
குழந்தை போல வளர்த்தனர். அவளை எங்கள் அத்தை மகன் செல்லப்பாவும்
பரமேச்வரனுக்கு திருமணம்
செய்து கொடுத்தனர். அவர் P.W.Dல் வேலையாக
இருந்தார். மாலை வேளைகளில் சில குழந்தைகளுக்கு
Tuition சொல்லிக் கொடுத்தார்.
Insurance Agent ஆகவும் இருந்தார். இவ்வாறு கடுமையான
உழைப்பில் தன் குடும்பத்தைக் காப்பாற்றிய செல்லப்பா அத்தான் ரொம்ப நல்ல மனிதர்.
சிரிக்கச் சிரிக்க பேசுவார். அவருக்கு ஒரு தம்பி
சேஷாத்திரி. இரு சகோதரிகள் வேதன்பா சீதுக்குட்டி. அவர்கள் எல்லோருமே ஜபல்பூரின் பக்கமுள்ள சின்ன ஊர்களில் இருந்து வந்தனர்.
செல்லப்பா இவர்கள் எல்லோரையும் விட பணம் செலவழிப்பில் கொஞ்சம் கூட
கஞ்சன். இருக்கும், ஏனென்றால் குழந்தைப்
பருவத்தில் போதிய பண வசதி இல்லாமல் ஆசைகளை அடக்கும் போது பணத்தின் மதிப்பு பன்மடங்காகத்
தெரியும். ஒரு விதமான Insecurity Feeling (தற்காப்பற்ற நிலை) வந்துவிடும். கோடை விடுமுறை அவர்களுக்கு எங்களுடன்தான். நாங்களும்
அவர்களுடன் நன்றாகப் பழகுவோம். பெண்களில் மூத்தவள் ஜெயா.
பிறகு தங்கம், பேபி, பையன்கள்,
விச்சு, அம்பி, மணி.
இதுவே ராஜி அக்கா குடும்பம்.
1961 மார்ச் மாதம் என் கல்யாணப்
பேச்சு ரொம்ப நாட்களாக பேசிக் கொண்டிருந்த நூறணி சுப்ரமணிய ஐயரின் மகன் திரு.பரசுராமனுடன் நிச்சயமாகியது. அவர்களுடையது எங்களுக்கு
நன்கு தெரிந்த குடும்பம். ஊரும் ஒன்றுதான். மணி ஐயருக்கு 4 பிள்ளைகள் ஒரு பெண். நிறைந்த குடும்பம். அவர் Orient Longmans எனும் புத்தகக் கம்பெனியில் டைரக்டராக இருந்தார். அவர்
மனைவி அம்மாளு எனும் ஸீதாலெக்ஷ்மி. நற்குணம் படைத்த பெண்மணி.
எங்கள் வீட்டு எல்லா விசேஷங்களுக்கும் அவர்கள் வருவார்கள். நாங்களும் அவ்வாறே போவோம். திரு.பரசுராமன் B.Com., முடித்துவிட்டு C.A., படித்துக் கொண்டிருந்தார். அதிலும் Final-ல் இரண்டு Paperகளே பாக்கியிருந்தன. அதை வைத்து என் அப்பா அவனுடைய எதிர்காலம் மிக்க நன்றாக இருக்கும். மேலும் தெரிந்த மனிதர்கள். அப்பாவுக்கு பிடித்துவிட்டதாலும்
ஜாதகங்கள் நன்கு பொருந்தியிருந்ததாலும் கல்யாணம் பரஸ்பரம் பேசி நிச்சயம் பண்ணினார்கள்.
மணி ஐயர் ஒருநாள் அப்பாவிடம் 'பரமேச்வரா,
எங்களுக்கு பணம் காசு இதெல்லாம் ஒரு பொருட்டல்ல. நல்ல மனிதர்களும் குடும்பத்துக்கு ஏற்ற பெண்ணும் இருந்தால் போதும்'
என்று வரதக்ஷைணையைப் பற்றியோ, மற்ற செலவைப் பற்றியோ
நீ கவலைப்பட வேண்டாம் என்றும் சொன்னாராம். அப்பாவிற்கு ரொம்ப
சந்தோஷம். கல்யாண ஏற்பாடுகள் வேகமாக நடந்தன.
18) நியாயத்திற்கு கிடைத்த சவால்
கல்யாணம் June 8 என்பதால் உறவினர்கள் பத்து நாட்களுக்கு முன்பே வந்துவிட்டனர். என் பெரியம்மா (சின்னமன்னி)யும்,
சாமி அண்ணா சுலோசனா மன்னியும் முதல் Batch அவர்கள்.
அப்பாவுக்கு ரொம்ப உபகாரமாக இருந்தனர். பெரியம்மா
எல்லோருக்கும் Moral Support நிறைய வேலையும் செய்வார்.
இவர்களைத் தவிர ராஜி அக்கா குடும்பம். அம்பி மாமா
குடும்பம். வெங்கிட்டு அண்ணா குடும்பம். ராஜம் அக்கா அவள் கணவர் பாலு மாமா, குழந்தைகள் ராஜாராம்,
ஹரி, குஞ்சி, பேபி,
பத்மா, சந்துரு அனைவரும் வந்தனர். மணி அண்ணா பத்மாவையும், பாஸுவையும் அழைத்து வந்தார்.
கோடை விடுமுறை ஆனதால் குழந்தைகளே கிட்டத்தட்ட 50 பேர் உண்டு. இந்நிலையில் மணி ஐயரின் தம்பியின் மனைவி,
கல்யாணத்திற்காக வந்தவர் திடீரென்று ஒரு வாரம் முன்னால் காலமடைந்தார்.
காரணம் திடீர் தலைவலி. Brain Tumour என்று சொன்னார்கள். கல்யாணம் தள்ளிப் போனது. அடுத்த முகூர்த்தம்
June 16 தேதிதான். எட்டு நாட்கள் தான் என்றாலும்,
தூர இடங்களிலிருந்து குஞ்சப்பாவின் பெண் கல்யாணத்திற்காக இடையூறுகளையெல்லாம்
மீறி வந்திருந்தனர். திரும்பிப் போய் பிறகு வரவும் முடியாது.
வீட்டில் தினமும் 60 பெரியவர்களும், 50
சிறியோரும் சாப்பாடு, டிபன், காப்பி என்றால் செலவை சற்று நினைத்துப் பாருங்கள். ஆனால்
அம்மாவோ, அப்பாவோ துளிகூட உணர்ச்சிகளை காட்டிக் கொள்ளாமல்,
கலகலப்பாக இருந்தனர். அப்பா, காலையில் சாமியண்ணா கூட காய்கறி வாங்க போய்விடுவார். வரும் போது குழந்தைகளுக்கு நுங்கு, நாகப்பழம்,
இளநீர் என்று ஏதாவது வாங்கி வருவார். மத்தியானம்
எல்லா சிறியவர்களுக்கும் ரஸகுல்லா, ஸந்தோஷ், பாந்துவா (குலாப்ஜாமுன்) ஸிங்காடா
இப்படி ஏதாவது வகைக்கு ஒன்று கிடைக்கும். எல்லாம் ஒரே கும்மாளம்தான்.
என் நிலை என்ன தெரியுமா? அப்பாவின் செலவைப் பார்த்து
நிலை குலைந்து போய்விட்டேன். ஒன்றிலும் மனம் ஒட்டவில்லை.
இதன் நடுவில் ஒருநாள் காலை நேரம் சம்பந்தி மணி ஐயர் வந்தார்.
அம்மா கொடுத்த காப்பியை ரசித்துக் குடித்துவிட்டு அப்பாவையும் கூட்டிக்
கொண்டு வெளியே சென்றார். அரை மணி நேரம் கழித்து வந்த அப்பாவின்
முகத்தில் அப்படியொரு உணர்ச்சிக் கொந்தளிப்பு. ஒன்றுமே பேசவில்லை.
நேராக குளிக்கப் போய்விட்டார். குளித்து வந்த
பின்னும் யாருடனும் எதுவும் பேசாமல் கொஞ்சம் மூக்குப் பொடியை உறிஞ்சிவிட்டு வாசல்
திண்ணையில் அமர்ந்தார். இந்த மாதிரி சமயங்களில் அம்மா நடுவில்
பேசமாட்டாள். இங்கிதம் தெரிந்தவள். சின்ன
மன்னி பெரியம்மாவிற்கு இருப்புக் கொள்ளவில்லை. 'ஜானகி,
கேளன்டி, ஏன் இப்படி இருக்கான்?' எனக்கு கவலையாக இருக்கும். சரி, நானே கேட்கிறேன்' என்று, அப்பாவிடம்
போய், 'பரமேச்வரா, சித்த உள்ள வா,
உங்கிட்ட பேசனும்' என்றாள். அப்பா உள்ளே சென்றார். தனிமையில் அம்மாவுடனும்,
பெரியம்மாவுடனும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு வெளியே வந்தவரின்
முகத்தில் ஒரு தெளிவு. ஏதோ தீர்மானம் செய்துவிட்டாற்போல் தெரிந்தது.
பிறகு அம்மா மற்றும் பெரியம்மாவின் பேச்சிலிருந்து நான் தெரிந்து கொண்டது
- அப்பாவை வெளியே அழைத்துப் போன மணி ஐயர் அப்பாவிடம் ரூ.3500
வரதக்ஷிணையாகக் கேட்டிருக்கிறார். காரணம் அவர்கள்
எதிர்பார்ப்புக்கு மேலேயே ஊரிலிருந்து உறவினர்கள் வந்துவிட்டதாகவும், எல்லோருக்கும் Train Charges மற்றும் துணிமணிகள் வகையறா
வாங்க நிறைய செலவாகிறது என்றாராம். அப்பாவுக்கு ஒரே அதிர்ச்சி.
இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பம் வரும் என்று அவர் கனவிலும் நினைத்ததில்லை.
அவர், 'மணி நீ இந்தத் தொகையை ஒரே மாதத்தில் சம்பாதித்து
விடுவாய். இதெல்லாம் உனக்கு ஒரு பொருட்டே இல்லை. ஆனால் எனக்கு இது மலை போன்றது. வருடம் பூரா உழைத்தாலும்
கிடைக்காது. நீ வரதக்ஷிணை வேண்டாம் என்றதால்தான் என் சக்திக்கும்
மீறி வைரத் தோடு போட சம்மதித்தேன். நீ கொஞ்சம் யோஜித்து சொல்'
என்றாராம். அதற்கு மணி ஐயர் இதில் யோஜிப்பதற்கு
ஒன்றும் இல்லை" என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
கல்யாணத்திற்கு இன்னும் 1 வாரம்தான் இருந்தது.
அப்பா மாலையில் எல்லோருடனும் பேசுகையில், குழந்தைகளை
Lake-ற்கு (அங்கு Children's Park உண்டு) விளையாட
அனுப்பிவிட்டார். பிறகு அண்ணாக்களுடன் கலந்து ஆலோசனை செய்ததில்
ஒருத்தருக்கும் இந்த விஷயம் பிடிக்கவில்லை. எல்லோருமே கோபமாகப்
பேசினார்கள். ஆனால் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இந்த விஷயம்
அப்படியே அமிழ்த்தப்பட்டது. ஆனால் என் மனதில் அளவில்லாத துயரம்.
எனக்கு திருமணம் எதற்கு என்று கூட நான் எண்ணியதுண்டு. படித்துப் பட்டம் பெற்றதெல்லாம் இதற்குத்தானா? அப்பாவிடம்
சொல்லி ஏதாவது செய்ய வேண்டும் என்ன செய்யலாம்? ஒன்றும் செய்யத்
துணிவில்லாத ஒரு பயந்த, முதுகெலும்பில்லாத பெண்ணாக வளர்ந்துவிட்டேனே!
நினைத்து நினைத்து மறுகினேன். இரவு சாப்பாடும்
முடிந்துவிட்டது. நான் இல்லாதது ஒருவருக்கும் தெரியவில்லை.
வாசல் திண்ணையின் ஒரு மூலையில் அமர்ந்து ஆழ்ந்த யோஜனையில் இருந்தேன்.
சாப்பாடு முடிந்து அப்பா வந்தார். தொண்டையைச்
செருகிக்கொண்டு. 'நந்தவனத்தில் ஓர் ஆண்டி அவன். நாலாறு மாதமாய் குயவனை வேண்டி கொண்டு வந்தான். ஒரு தோண்டி
அதைக் கூத்தாடி கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி' என்று பாம்பாட்டு
சித்தர் பாட்டு ஒன்றை பாடிக்கொண்டே நான் இருக்கும் பக்கம் வந்தார் (அப்பாவிற்கு பாட்டு ரொம்ப பிடிக்கும், குரலும் மெலிசாக
நன்றாக இருக்கும், நங்தணார் சரித்திரம் பூராவும் பாடிக்கொண்டே
எங்களுக்கு சொல்வார். 'God is the first great referner' என்பார்)
' யாரு? ஸரோஜாவா? ஏன்மா இங்கே இருட்டில் தனியாக என்ன
செய்கிறாய்? சாப்பிட்டாயா? என்று கேட்டுக்
கொண்டே என் பக்கத்தில் அமர்ந்தார். எனக்கு துக்கம் தொண்டையை
அடைத்தது. கண்களில் தண்ணீர் தாரையாகக் கொட்டியது, 'அப்பா. எனக்கு இப்போ இந்தக் கல்யாணம் வேண்டாமே',
என்றேன். அப்பா புரிந்து கொண்டார். ' சீ, அசடு எதையாவது நினைத்துக்கொண்டு இப்படியெல்லாம்
பேசுவாளா? உன் அப்பா இன்னும் திடகாத்திரமாகத்தான் இருக்கேன்மா.
இன்னும் நிறைய சாம்பாதிக்கலாம். இந்த
Rs.3500/- என்ன, என் குழந்தைக்காக எதையும் கொடுக்கலாம். நான் பண்ணி காட்டுகிறேன்
பார். நீ இதிலெல்லாம் தலையிட்டு கவலைப்படாமல் சந்தோஷமாக இருக்கணும்.
எந்த விதத்திலும் எங்கள் நல்ல பெயருக்கு பங்கம் வராமல் குடும்பத்திற்கு
ஏற்ற மருமகளாக நடந்து கொள்ளணும். நான் இதெல்லாம் உனக்குச் சொல்ல
வேண்டிய அவசியமே இல்லை. மணிஐயருக்கு எத்தனை உயர்ந்த பொக்கிஷத்தைக்
கொடுக்கிறேன் என்று அவருக்கு தெரியலையே! எல்லாம் நான் பட புரியும்
என்று சொல்லிக்கொண்டே என்னையும் கூட்டிக்கொண்டு உள்ளே சென்றார். நாட்கள் பறந்தன. கல்யாண நாளும் நெருங்கியது. மிகக் கோலாகலமாக உறவினர்கள், பந்துகளின் ஒத்துழைப்புடன்
(பெரிய ஆலமரமான) என் அப்பா ஸ்ரீபரமேச்வரன்.
வேங்கடலக்ஷ்மி என்றும் என்னை பரசுராமன் என்னும் ராமனுக்கு கன்னிகாதானம்
செய்து கொடுத்தார். மிக விமரிசையாக நடந்த இந்தத் திருமணம் நெடுநாட்களுக்கு
எல்லோராலும் பாராட்டிப் பேசப்பட்டது. இப்படி நியாயமான முறையில்
அப்பா தனக்கு வந்த சவாலையும் வென்றார்.
19) பின் விளைவுகள்
என் புத்தகம் 24/B, மனோகஹர் புகூர் ரோடில் இருந்தது. பிறந்தகத்திலிருந்து
ரொம்ப பக்கம்தான். இருப்பினும் வீட்டை விட்டு, அதுவும் என் அருமைத் தம்பியையும் தங்கையையும் விட்டு பிரிந்து போவது ரொம்ப
வருத்தமாக இருந்தது. எப்போதும் போல் நெஞ்சில் கல்லாகி உருண்டு
வந்த துக்கத்தை அடக்கிக்கொண்டு எல்லோரிடமும் விடை பெற்றேன். என் உடம்பின் முக்கியமான ஒரு அங்கத்தை விட்டுவருவது போல் ஒரு வலி.
தம்பி கண்ணனின் முகம் அடிக்கடி தோன்றி அலைக்கழித்தது. பாவம், அவனுக்கு அப்போது வயது ஏழுகூட நிரம்பவில்லை.
என்ன தோன்றியதோ என்னவோ சில நாட்களாக என்னிடம் வருவதைக்கூட குறைத்துக்கொண்டு
விட்டான். எடுத்ததற்கெல்லாம் அக்காவைத் தேடும் கண்கள் விச்சா
அண்ணாவைத் தேடத் தொடங்கின. அது எனக்கு இன்னமும் அதிகமான துன்பத்தையும்,
ஏமாற்றத்தையும் தந்தது. இப்படியே போனால் என் கண்ணன்
என்னை மறந்துவிடுவானோ? கண்களில் நீர் பெருகியது. என் பக்கத்தில் யாரோ ஒரு வயதான பெண்மணி என்னை சமாதானப்படுத்தி அழைத்துச் சேன்றார்.
நாட்கள் நகர்ந்தன. நானும் மற்ற பெண்களைப் போல
என் புக்ககத்திற்கு ஏற்றவாறு என்னை வளைத்துக் கொள்ள செய்த முயற்சிகளிலும் பெரியவர்களின்
தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் என் நேரத்தைக் கடத்தினேன். மேல்படிப்பு,
வேலை எல்லாம் காற்றோடு கலந்துவிட்டன. அம்மா,
கண்ணன், சுசீலாவுடன் சில நாட்களுக்கு ஒருமுறை என்னைப்
பார்க்க வருவான். அப்பா எப்போதாவது Tuition முடிந்து போகும் வழிப்பில்
வந்து பார்த்துச் செல்வார். ஆனால் இதனவெல்லாம் எனக்கு திருப்தி
வராது. ரொம்ப செயற்கைத்தனமாக
இருக்கும் வீட்டில் இருக்கும் போதிருந்த சுதந்திரமும், சந்தோஷமும்
திரும்பி வருமா?
என் கணவர் திரு.பரசுராமன்
புது டில்லியில் Orient Longmans எனும் புத்தகக் கம்பெனியில்
வேலை கிடைத்து அங்கு சென்றார். அதன் பிறகு 6 மாதங்கள் நான் என் மாமனார், மாமியாருடன் கல்கத்தாவிலேயே
இருந்தேன். அவர்கள் என்னை அன்புடன் நன்றாக கவனித்துக் கொண்டனர்.
பிறகு டில்லியில் ஒரு வீடு பார்த்து Fix பண்ணியிருப்பதாக என் கணவர் கூற,
என்னை Delhiல் கொண்டு போய்விட்டனர். பரசுராமன் C.A., கடைசி பார்டில் 2 Paperகள் பாஸ் பண்ணாததால் அதற்கும் படித்துக் கொண்டிருந்தார். அப்போது தான் எனக்கு என் பெற்றோரையும், தம்பி,
தங்கைகளையும் விட்டு நெடுந்தூர வந்துவிட்டதன் தவறு புரிந்தது.
எவ்வளவு தூரம்! நினைத்தால் போக முடியுமா என்ன?
என் அப்பாவும், என்னை வெளியே கொடுக்கக் கூடாது
என்று, கல்கத்தாவிற்கு உள்ளேயேதான் ஜாதகம் பார்த்து வந்தார்.
ஏதாவது வெளி ஜாதகம் வந்தால் கூட மிகுந்த தயக்கத்துடன் அதை எடுப்பார்.
அவருக்கு இது பெரிய அதிர்ச்சி. ஆனால் மாப்பிள்ளை
வேலையிலும், படிப்பிலும் முன்னேறி அவர் அப்பாவைப் போல் நல்ல
நிலைக்கு வர வேண்டும் என்ற ஆவலில் தன் மனக்குறையை வெளியே காண்பித்துக் கொள்ளவில்லை.
நானும் டெல்லி போக வேண்டிய நாள் நெருங்கியது. அம்மா என் மாமியாரிடம் என்னை சில நாட்கள் தங்களுடன் இருக்க அனுப்புமாறு வேண்டினர்.
என் மாமியாரும் என்னிடம் போய் இரண்டு நாட்கள் இருந்துவிட்டு வந்துவிடு.
Shopping பண்ண
Pack பண்ண எல்லாம் சரியாக இருக்கும்
என்றார். அம்மா, அப்பா வந்து என்னை அழைத்துச்
சென்றனர். அந்த நேரம் என் வீட்டிற்குள் நுழையும் போது நான் அடைந்த
மகிழ்ச்சியும், அதேசமயம் 'இதெல்லாம் இரண்டே
நாட்களுக்குத் தானே என்ன துக்கமும் வார்த்தைகளில் வர்ணிக்க இயலாது. என் கண்ணன் என்னைப் பார்த்தும் ஓடி வந்து கட்டிக் கொண்டான். கை விரல்களைக் கிள்ளினான். "இனிமேல் நீ அவாத்துக்கு
போகக் கூடாது தெரியுமா? உனக்கு நான், சுசீலா,
எல்லாம் இல்லையா பின் ஏன் அவர் (என் கணவர்)
கூடப் போனே? எனக்கு அவரைப் பிடிக்கவே இல்லை"
என்று ஒரே மூச்சில் பேசி முடித்தான். நான் இருந்த
இரண்டு நாட்களும் என்னைவிட்டு அசங்கவில்லை. அவனுடைய பள்ளிக்கூட
நோட்கள் பரீக்ஷையில் கிடைத்த மதிப்பெண்கள் ஆசிரியரின் பாராட்டுகள் (நன்றுப் படிப்பான்) முதலியவற்றை ஒன்றுவிடாமல் காட்டினான்.
இடையில் சுசீலாவைப் பற்றிய குற்றப் பத்திரிக்கையும் உண்டு.
சுசீலா - என் அன்புத் தங்கை. அவளுக்கு நின்று பேசவே தெரியாது.
எப்போதும் ஓட்டம். குழந்தைகள் என்றால் உயிர்.
அக்கம் பக்கத்து குழந்தைகளையெல்லாம் அழைத்து வருவாள். அவளும் பக்கத்து வீட்டு
Bungali பெண்களுடன் பேசிக் கொண்டோ விளையாடிக் கொண்டோ நேரம்
போக்குவாள். எல்லோராலும் விரும்பப்பட்டவள். சரளமாக பெங்காலி பேசுவாள். "அக்காஇ நீ தலை வாரி
பின்னினால்தான் பின்னியது போலிருக்கு. நீ எங்கள் கூட இங்கேயே
இருந்துவிடு" என்பாள். எனக்காக கடைக்குப்
போய் சூடாக ஸிங்காடா (Samosa) மற்றும் ரஸகுல்லா, ஸந்தேஷ் முதலிய பெங்காலி தின்பண்டங்களை
வாங்கி வருவாள். ஆனால் மாலையில் வீட்டில் பார்க்க முடியாது.
ஓடிவிடுவாள். நண்பர்களுடன் விளையாட்டு.
மத்தியானம் எல்லோரும் சுற்றி அமர்ந்து பேசிக் கொண்டே டிபன் சாப்பிடுவது
ஓர் இனிமையான அனுபவமாக இருந்தது.
20) அப்பாவின் அறிவுரைகள்
அன்று இரவு மணி பத்து. சுசீலாவும், கண்ணனும் தூங்கிவிட்டனர். நான், அம்மா, அப்பா மூவரும் வாசல்
திண்ணையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். எனக்கு அம்மா,
வேலைகளை எப்படி நேர்த்தியாகச் செய்ய வேண்டும் என்று முன்னாலேயே பழக்கியிருந்தான்.
இப்போது என்னென்ன பண்டிகைகளை எப்படிக் கொண்டாட வேண்டும், என்ன பூஜைக்கு என்ன நைவேத்யம் மற்றும் பல தகவல்களை சந்தேகத்திற்கு இடமில்லாமல்
சொல்லித் தந்தாள்.
அப்பா இரண்டு தடவைகள் என்னவோ சொல்ல
வந்து நிறுத்திக் கொண்டார். நான் தூண்டிக் கேட்டதின் மேல் மெல்ல
பேசத் துவங்கினார். "ஒன்றும் இல்லை. நீ இப்படி எங்களைவிட்டு நெடுந்தூரம் போவாய் என்று நினைக்கவில்லை. உனக்கு அறிவுரை என்று எதைச் சொல்ல? உனக்கு விவரம் தெரிந்து
நம் வீட்டு சூழ்நிலையைப் பார்த்திருக்கிறாய். இதிலிருந்தே உனக்கு
பணத்தை எப்படிச் செலவு செய்யலாம் எப்படி செய்யக் கூடாது என்று நன்றாகத் தெரிந்திருக்கும்.
நாங்கள் பழைய கால கொள்கைகள் சிலவற்றை பின்பற்றி அனாவசிய செலவுகள் சில
செய்திருக்கலாம். எது மிக அவசியமோ அது மாத்திரம் நம்மிடம் இருந்தால்
போதும். நம் மன்தை திருப்திபடுத்தினால் போதும். மற்றவர்களை திருப்திப்படுத்த நம்மையே நாம் உயர்த்திக் காட்ட வேண்டாம்.
யார் வந்தாலும் இல்லை எண்ணாமல், இருப்பதைக் கொடுத்து
உபசரிக்க வேண்டும். விருந்தோம்பல் நம் குடும்பத்திலேயே அடி வேராக
வருவது. அதை விடக் கூடாது. நம் பண்டிகைகளை
விடாமல் எளிமையாக கொண்டாடு. மாதம் எப்படியும் 10 சதவீதம் சேமிப்பு உன் வகையில் இருக்க வேண்டும். இதையெல்லாம்
சொல்ல சொல்ல அப்பாவிற்கு என்னவோ ரொம்ப நேரம் பேசினால் போல் மூச்சு வாங்கிற்று.
அம்மா ஒரு டம்ளர் தண்ணீர் கொடுத்து எதற்கு இப்படி ஒரேயடியாக பேசனும்?
அவள் இன்றே போகிறாளா? நம் கூடத்தான் இருக்காள்.
போய் படுத்து தூங்குங்கள்" என்றாள்.
அன்று இரவு மூவருமே தூங்கவில்லை என்பதுதான் உண்மை.
அடுத்த நாள் காலையிலும் அம்மாவிடம்
நாசூக்காக தயங்கிய படியே அப்பாவின் சேமிப்பு பற்றி கேட்ட போது அதைப் பற்றி ஒன்றும்
சொல்லவில்லை. கூடிய சீக்கிரமே தனக்கு ஹெட்மாஸ்டர் போஸ்ட் கிடைத்தால்
தாராளமாக சேவிங்ஸ் இருக்கும் என்றார். நானும் கொஞ்சம் சமாதானமடைந்து
மாமியாருடன் டெல்லி புறப்பட்டேன். அப்பாவிற்கு மிகவும் பிடிக்காத
விஷயம் கடன் வாங்குவது அல்லது கடன் கொடுப்பது. ஆனால் அதையும்
அவர் பிற்காலத்தில் செய்ய வேண்டி வந்தது கொடுமை.
21) டெல்லி வாழ்க்கை
1962 மார்ச் மாதம் 12ம் தேதி நானும், என் மாமியாரும் டெல்லி போய் சேர்ந்தோம்.
Stationக்கு என் கணவர் பரசுராமனும், வெங்கிட்டு
அண்ணாவும் வந்திருந்தனர். என் கணவர் அங்கு கரோல் பாக்,
நய்வாலா கல்லியில் ஒரு வீடு ஏற்பாடு (வாடகைக்கு)
செய்திருந்தார். இரண்டு அறைகள், ஒரு சின்ன சமையலறை. நடுவில் ஒரு வராந்தா,
Bathroom, Toilet எல்லாம் Separate சின்னதாக இருந்தாலும்
வெளிச்சத்துடனும், காற்றோட்டமாகவும் இருந்தது. முதல் மாடி ஏறும் படிகள்தான் குறுகலாகவும், செங்குத்தாகவும்
இருந்தன. கீழ் போர்ஷனில் நம் தென்நாட்டைச் சேர்ந்த தமிழ் குடும்பம்
இருந்தது. வயதான பெரியவர், அவருடைய
4 பெண்களும் (எல்லோரும் என்னைவிடப் பெரியவர்கள்)
இரண்டு பையன்களும், மூத்த பையன் ராமு கல்யாணமே
பண்ணிக் கொள்ளவில்லை. இரண்டாவது லக்ஷ்மி, கல்யாணமாகி ஒரு பெண் குழந்தை இருந்தது. மூன்றாவதாக சரஸ்வதி
B.Ed., பாஸ் பண்ணி டீச்சராக
இருந்தாள். நாலாவது சுந்தரி வீட்டையும், அப்பாவையும் கவனித்துக் கொண்டு வந்தாள். ஐந்தாவது சரோஜா.
ரொம்ப நன்றாக தையல் வேலை, Grafts முதலியன செய்வாள். சொல்லியும் கொடுப்பாள். ஆறாவது மணி. Dena
Bankல் வேலையாக இருந்தான். பழகப் பழக அவர்கள் எங்களுக்கு
சொந்தக்காரர்களுக்கும் மேல் பாசமும், அன்பும் நிறைந்த சகோதர,
சகோதரிகள் ஆனார்கள்.
வெங்கிட்டு அண்ணா வாரத்தில் ஒரு
தடவையாவது வந்து விசாரித்துக் கொள்வார். பங்கஜ மன்னியும் பண்டிகைகளுக்கு
சாப்பிடச் சொல்லி அழைப்பாள். ஆனால் எனக்கு இன்னும் ஸ்வாமி படங்களை
அலங்காரம் பண்ணி நைவேத்யம் செய்வதெல்லாம் பழக்கம் உண்டென்பதால் நான் முக்காலும் வீட்டிலேயே
எல்லாம் பண்ணி பிறகு எல்லாம் அவர்களுக்கும் கொடுத்து நமஸ்காரம் செய்வேன். அவர்கள் அங்கு இருந்தது எனக்கு பல விதத்திலும் உபகாரமாகவும், ஆதரவாகவும் இருந்தது. வெங்கிட்டு அண்ணாவைப் போல் பாசம்
மிகுந்த ஒருவரை இந்தக் காலத்தில் பார்க்க முடியாது. என் மாமியார்
எங்களுடன் சில நாட்கள் தங்கிவிட்டு கல்கத்தா திரும்பிவிட்டார். பிறகுதான் எனக்கு தனிமையின் அர்த்தமே புரிந்தது. இவ்வளவு
நாட்கள் நிறைந்த குடும்பத்தில் இருந்துவிட்டு இப்போது தனியாக இருப்பது ரொம்ப கஷ்டமாக
இருந்தது. அப்போது கீழ் வீட்டில் இருந்த சரோஜாவுடன் சேர்ந்து
பலவித தையல்களிலும், கைவேலைகளிலும் ஈடுபட்டேன். இதன் நடுவில் B.Ed., பண்ண வேண்டும் என்று ஒரு ஆசை நெடுநாட்களாக இருந்தது. தயக்கத்துடன் என் கணவரிடம் சொன்ன போது, Delhi Universityல் போய் விசாரிக்கலாம் என்றார். அடுத்து வந்த வாரங்களில்
ஒரு நாள் நாங்கள் அங்கு சென்று விசாரித்தோம். அவர்களின் தகவல்படி
அங்கு தபால் மூலம் கற்பதோ, Private ஆக கற்பதோ முடியாது.
அங்கே சேர்ந்து தினசரி வகுப்புக்குப் போய்தான் படிக்க வேண்டும்.
அது என் வீட்டின் சூழ்நிலையில் முடியாத ஒன்று. அதனால் அந்த ஆசையைக் கைவிட்டேன். மேலும் நான் மேற்கொண்டு
படிப்பதிலோ, பாடுவதிலோ யாருக்கும் ஒருவிதமான விருப்பமோ,
ஆர்வமோ இருப்பதாகத் தெரியவில்லை. இப்போது யோஜித்துப்
பார்க்கும் போது இந்தத் தலைமுறை இளையவர்களைப் போல் தைரியம், பகுத்தறிவு, முன்னுக்கு வரவேண்டும் என்ற வேகம் எல்லாம்
என்னிடம் ரொம்ப குறைவு. அதற்காக இப்போது வருந்துகிறேன்.
சரி நான் என்னதான் சாதித்தேன்? கட்டின மனக் கோட்டைகளெல்லாம்
தகர்த்து, ஒரு சராசரி இந்தியப் பெண் போல, மனைவி போல, அம்மா போல ஒரு குழந்தைக்கு தாயாகி ஒரு குடும்பம்
உருவாகச் செய்தேன்!
1963 - ஜூலை 26th அன்று என் மூத்த மகள் உஷா, கல்கத்தா மாத்ரு பவனில்
(Hospital) பிறந்தாள். வீட்டில் கண்ணனுக்கு பிறகு
(9 வருடங்கள்) குழந்தை அவள்தான். சுசீலா, கண்ணனிற்கு சந்தோஷம் தாங்கவில்லை. அப்பா, சின்னக் குழந்தைகளை தள்ளி நின்றுதான் பார்ப்பார்.
தொட்டு, தூக்கி எல்லாம் செய்ததே கிடையாது.
உஷாவை ரொம்பப் பிடிக்கும். 'அம்மாப் பொண்ணு'
என்று செல்லமாகக் கூப்பிடுவார். அவளும் எல்லோருடனும்
நன்றாகப் பழகுவாள். ஆனால் அவளுடைய பொருட்களை யாரும் தொடவிடமாட்டாள்.
அவளுடைய நல்ல Behaviour
அப்பாவிற்கு ரொம்பப் பிடிக்கும். என் ப்ரசவமெல்லாம்
முடிந்து நான் Delhi திரும்பும் போது என் அப்பாதான் என்னைக் கொண்டு விடுவதாக இருந்தார்.
ஆனால் என் கொழுந்தன் ஹரி அந்த சமயம் வேலை தேடிக் கொண்டிருந்தான்.
அவன் அந்த விஷயமாக Delhi வர விருப்பப்பட்டதால்
அப்பாவின் பயணம் நின்று போயிற்று. அப்பா எழுதும் ஒவ்வொரு கடிதமும்
ஒரு காவியம். ஒரு போஸ்ட்
கார்டிலோ அல்லது Inland Letterலோ அனைத்து சமாசாரங்களையும் கோர்வையாக
எழுதிவிடுவார். அவரிடமிருந்து கடிதம் வந்தாலே அது ஒரு
Tonic மாதிரி. அம்மாவும் அப்படியே. யாராவது Delhi வந்தவர்கள் கல்கத்தா போய் என் குடித்தனத்தை புகழ்ந்து பேசினால் உடனேயே அப்பாவின்
பாராட்டுக்கள் வந்துவிடும். 1965ம் ஆண்டு என் கணவர்
C.A பாஸ் பண்ணினார். அப்பா மிகவும் சந்தோஷம் அடைந்து
அவருக்கு அழகான பாராட்டு கடிதம் எழுதியிருந்தார். இனி அவருக்கு
மேலுக்கு மேல் நல்ல பதவியும், பெயரும் புகழும் கிடைக்கும் என்றும்,
அவருடைய பேத்தி 'அம்மா பொண்ணு' மிகவும் அதிர்ஷ்டமானவள் என்றம் எழுதியிருந்தார். உஷாவின்
பிறந்தநாள் (1964)ல் வந்தது. அதற்காவது
அப்பா வருவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அப்போதும் ஏதோ
தடங்கலினால் அவர் வர இயலவில்லை. ஒருநாள் கூட அப்பாவை வைத்து கொள்ளாதது
எனக்கு தீராத குறை. வாழ்க்கையில் எத்தனையோ சந்தர்ப்பங்கள் நம்
விருப்பப்படி நடக்காமலேயே போய்விடுகின்றன. (வர இயலாமைக்கு அப்பா
எனக்கு எழுதிய கடிதம் 48 வருடங்களாக என்னிடம் இருக்கிறது)
அவ்வகையில் இதுவும் ஒன்று. 1965ம் ஆண்டு ஏப்ரல்
மாதம் நானும், உஷாவும் கல்கத்தா சென்றோம். அங்கு புத்தகத்திலும், பிறந்தகத்திலும் சில நாட்கள் தங்கி
திரும்பி வர உஷாவிற்கு ஒரே குஷி. அங்கு ஏகமாக கவனிப்பு.
அம்மா பொன் தாத்தா ஸ்டேஷன் வந்திருந்தார். யாரிடமும்
அதிகமாக பழகாத அவள் தாத்தாவிடம் ரொம்ப சகஜமாக ஒட்டிக் கொண்டாள். என் புக்ககத்திலும் அவள் சித்தப்பா ராஜூ அத்தை சியாமளா, பாட்டி கூட 'பார்க்' போவதில் ரொம்ப
சந்தோஷம். கண்ணன் சுசீலாவின் சந்தோஷத்தை சொல்லவே இயலாது.
ஆட்டமும், பாட்டும் 20 நாட்கள்
ஓடிவிட்டன. இதனிடையில் என் பெரியம்மா (சின்னமன்னி)
தன் பேரன்களுக்கு திருப்பதியில் வைத்து பூணல் போடுவதாகவும்,
கண்ணனுக்கும் 11வது வயதானதால் அதனோடேயே போட்டுவிடலாம்
என்று ஒரு Idea கொடுத்தார்கள்.
22) 1965 ஒரு திருப்பம் - திருப்பதி
திருப்பதி வேங்கடாசலபதி எங்கள்
குல தெய்வம். அங்கு போய் பூணல் போடுவதென்றால் மிகவும் உத்தமமான
காரியம்தான். ஆனால் எல்லாவற்றிற்கும் முக்கிய அம்சமாக
'பணம்' வேண்டி வருமே? திடீரென்று
பண்ணுவதால் வேறு ஏற்பாடு ஒன்றும் செய்ய முடியாது. பெரியம்மா என்னதான்
செலவெல்லாம் Share பண்ணிக்கறோம் என்று சொன்னாலும் அப்பா யாருக்கும்
சிரமம் கொடுக்க கூடாது என்று நினைத்தார். கூட்டி கழித்து பார்த்ததில்
Rs.2000/- வரை துண்டு விழுந்தது. அதை பாப்பா சித்தி
கணவர் கிருஷ்ணன் சித்தப்பாவிடம் கடனாக வாங்கிக் கொண்டார். அதுவே
அப்பா வாங்கிய முதலும் முடிவுமான கடன். எந்த மனிதன் கடன் என்ற
சொல்லுக்கே எதிரியாக இருந்தாரோ, அவரையே கடன் வாங்கச் செய்த விதியின் விளையாடலை
என்னவென்று சொல்வது. மே மாதம் 13ஆம் தேதி
திருப்பதியில் உபநயனம். துரையண்ணாவின் இரண்டு பையன்கள்,
கண்ணன், அம்பி மாமாவின் பையன் ஆனந்த் எல்லோருக்கும்
மிக விமரிசையாக உபநயனம் திருப்பதியில் நடந்தேறியது. செலவு நினைத்ததற்கு
இரண்டு மடங்காயிற்று. நானும், என் கணவரும்
அங்கிருந்து பழநி போய், சென்னை வந்து அங்கிருந்து டெல்லி திரும்பினோம்.
அப்பா, அம்மா, குழந்தைகள் பங்கனூர் போய் (அப்பா அவர் சிநேகிதன் நேமிநாதனை பார்க்க வேலூர் போனார்) அங்கிருந்து சென்னை வந்து கல்கத்தா திரும்பினார். சென்னை
ரயில்வே ஸ்டேஷன்க்கு அப்பா கண்ணனை அழைத்துக் கொண்டு வந்திருந்தார். அப்பொழுது உஷாவிற்கு ஒரே ஜூரம். அதனால் அப்பா வருத்தத்தில்
ஜாஸ்தி பேசவில்லை. முகத்தில் ஒரு சோகம். எனக்கு அப்பாவை பார்த்து துக்கம் தாங்கவில்லை. அவர் கால்
வீக்கம் திருப்பதியில் Bus கிடைக்காமல் நடந்து இறங்கியதால் வந்தது.
கல்கத்தா போனால் சரியாகிவிடும் என்று என்னை சமாதானப்படுத்தினார்.
கண்ணனுக்கு Train என்றால் ரொம்ப ஆசை. அதனால் அவனையும் அழைத்துக் கொண்டு
Engine முதல் Guard Cabin
வரை எல்லாம் காட்டிக் கொடுத்து Driver வேலை எப்படி Guardன் வேலை என்ன என்பதையெல்லாம் காட்டிக்
கொடுத்த Driver வேலை எப்படி Guardன் வேலை
என்ன என்பதையெல்லாம் விவரமாக சொல்லி கொடுத்துவிட்டு Train புறப்பட
பத்து நிமிடம் முன்பு வந்தார். உஷாவிற்கு Flaskல் வெந்நீர்
வாங்கி தந்துவிட்டு பொதுவாக கொஞ்சம் பேசிவிட்டு Train புறப்பட்டதும்
விடை பெற்றார். கண்ணன் நெடுநேரம் கையை ஆட்டி 'டாடா' காட்டினது கண்ணிலிருந்து விலகவில்லை. இரண்டு நாள் பயணம் மிகவும் கஷ்டபடுத்திவிட்டது. வெய்யில்
ஒருபுறம். உடல்நலமில்லாத குழந்தை ஒருபுறம். எப்பொழுது வீடு வந்து சேருவோம் என்று தோன்றிவிட்டது.
அப்பா, அம்மா
குழந்தைகள் கல்கத்தா போய் சேர்ந்த விவரத்திற்கு கடிதம் வந்தது. அப்பாவுக்கு இந்த பூணூல் கல்யாணத்தால் நினைத்ததற்கு மேல் ரொம்ப சிலவு.
ஏதோ திடீரென்று முடிவெடுத்ததால் திட்டமிட்டு ஒன்றும் செயல்பட முடியவில்லை.
கல்கத்தாவிலிருந்து எல்லோரும் திருப்பதி போய் வர Trail செலவு அதைத் தவிர அங்கு தங்கின மூன்று நாட்கள் சாப்பாடு மற்றும் இதர செலவுகளுக்குமாக
பெரியம்மாவிடம் கொடுத்த தொகை, அம்பி மாமாவிற்கு எதிர் சீர்.
துரையண்ணா பையன்களுக்கு சதியீடல் என்று இழுத்துக் கொண்டே போயிற்று.
இதையெல்லாம் நினைத்து நான் மிகவும் வருத்தப்பட்டேன். ஆனால் அப்பாவோ, அம்மாவோ அடுத்து வந்த கடிதங்களில் ஒரு
வார்த்தை கூட இதைப் பற்றி எழுதவில்லை.
பண்டிகைகள் வரிசையாக வந்தன.
வரலஷ்மி பூஜை ஆன மறுநாளே ஆவணி அவிட்டமும் வந்தது. கண்ணனுக்கு தலை ஆவணி அவிட்டம். அதற்கு முன்பு எழுதின
கடிதத்திலேயே அப்பா, அவன் தினம் ஸமிதாதானம் செய்வதாகவும்,
ஸாஸ்திரிகள் தினம் வருவதாகவும் கண்ணன் மந்திரமெல்லாம் ஸ்பஷ்டமாகச் சொல்வதாகவும்
எழுதியிருந்தார். ஆவணி அவிட்டத்திற்கு உறவினர்களையும்,
சம்பந்தியையும் சாப்பிட அழைத்திருப்பதாக எழுதியிருந்தார். ஆவணி அவிட்டம் முடிந்து வந்த கடிதம், அன்று என்னென்ன
நடந்தது. யார் யார் வந்தார்கள். சாப்பாடு
Menu, எல்லாம் விவரமாகச் சொல்லிற்று. கடிதம் எழுதும்
திறமை எல்லோருக்கும் வருவதில்லை. வெங்கிட்டு அண்ணா, சாமி அண்ணா, சுசீலா முதலியோர் கடிதம் எழுதுவதில் திறமை
உள்ளவர்கள். சுசீலா அவள் கடிதம் மூலம் Live Telecost போல எல்லா சம்பவங்களையும் நம் கண் முன் கொண்டு வருவாள். அப்படிப் பார்த்தால் என் அம்மா, சித்தி, என் மாமியார் எல்லோரும் கடிதம் எழுதுவதில் வல்லவர்கள். முன் காலத்து குறைந்த படிப்பு கூட இந்தக் காலத்து படிப்புத் திறனை விட மேம்பட்டதாகத்
தெரிகிறது.
23) மரம் சாய்ந்தது - விழுதுகள் படர்ந்தன
ஆவணி அவிட்டம் முடிந்த பின்பு வரும்
முக்கியமான பண்டிகைகள் நவராத்திரி, துர்கா பூஜா (கல்கத்தாவில்) தீபாவளி, காளி பூஜா.
எங்கள் வீட்டுக்குப் பக்கத்திலேயே பெரிதாகப் பந்தல் போட்டு துர்கா பூஜா
நடக்கும். அங்கு ஒவ்வொரு Areaவிற்கும்
தனித்தனி பூஜை உண்டு. ஒன்றைவிட மற்றொன்று அழகாகவும்,
சிறப்பாக அலங்கரிக்கப்பட்டும் இருக்கும். அப்போது
நவராத்திரி சமயம். நம்மவர்கள் அழகான பட்டுடுத்தி பூவும்,
பொட்டுமாக மங்களகரமாக ஒருவர் வீட்டுக்கு மற்றவர் அழைக்கச் செல்வர்.
நம் தென்னிந்தியர்கள் வீட்டில் கொலுவும் வைப்பது உண்டு. வருவோர், போவோரும் பாட்டும் ஸ்லோகமுமாக கல்யாணக்
கலை கட்டும். 'ஜானகி மாமியின் பிரசாதம் மிகவும் ருசி'
என்பார்கள். அம்மா எல்லோரையும் அழைக்க என்னையும்,
சுசீலாவையும் அனுப்புவாள். சில சமயம் அம்பு அண்ணாவின்
மனைவி ராதா, அல்லது சி.சாமி அண்ணா மனைவி
வனஜா அல்லது நாட்டுப் பெண்கள் யாராவது கூட இருப்பார்கள். கடைசி
இரண்டு நாட்கள், அம்மாவும் சித்தியுமாக தங்களை அழைத்தவர்கள் வீட்டிற்கு
தாம்பூலம் பெறச் செல்வார்கள். அன்று வீட்டை நான் பார்த்துக் கொள்வேன்.
நாங்கள் எல்லோர் வீட்டிற்கும் போய் வந்த பிறகு அவர்கள் வீட்டில் எங்களுக்குக்
கிடைத்த ப்ரஸாத Packetகளைப் பிரித்து, அதில்
என்ன ப்ரஸாதமோ அதை அப்பா அழகாக ஒரு பெரிய தட்டில் தனித்தனியாக எடுத்து வைப்பார்.
எல்லாவற்றையும் ருசி பார்த்துவிட்டு எது Best, எது O.K., எது சகிக்கலை என்று சிரிக்கச் சிரிக்கச் சொல்வார்.
அந்த வருட நவராத்திரி நன்றாகவே
தொடங்கினாலும் விஜயதசமி மிக துக்கமான செய்தியைத் தாங்கி வந்தது. எங்கள் ராஜம் அக்கா (ஹரிஹரன் ஐயண்ணா பெரியப்பாவின் மகள்)ன் கணவர் பாலு மாமா திடீரென்று காலமாகிவிட்டார். ராஜம்
அக்காவிற்கு சின்ன வயது (34) அவளுக்கும், பாலு மாமாவிற்கும் 14 வயது வித்யாசம். மாமா ரொம்ப நல்ல மனிதர். Businessல் நல்ல பணம் வந்து
கொண்டிருந்தது. எல்லோருக்கும் உதவுவார். அவர் திடீரேன்று போனது எல்லோருக்கும் ஒரே அதிர்ச்சி. அதுவும் அப்பாவிற்கு ராஜம் என்றால் ரொம்ப பிரியம். எனக்கு
வந்த கடிதத்தில் இதைப் பற்றி ரொம்ப வேதனைப்பட்டு எழுதியிருந்தார். அக்காவிற்கு ஆறு குழந்தைகள், மூன்று பையன்கள்,
ராஜாராம், ஹரி, சந்திரன்
மூன்று பெண்கள் பேபி, குஞ்சி, பத்மா.
ரொம்ப சின்ன வயதிலேயே கல்யாணம். குழந்தைகளும்
சீக்கிரமே பிறந்துவிட்டன. அப்பா சொல்வார் 'கல்யாணத்திற்கு அவசரப்படாமல் படிக்க வைத்திருக்க வேண்டும், ராஜம் ரொம்ப புத்திசாலி' என்று, எல்லாம் விதி. பாலு மாமாவின் Business
Partners கடைசியில் சரியாக பங்கு
தராததால் அவளுக்கு கொஞ்சம் கஷ்டம் வந்துவிட்டது. அப்பாவிற்கு
அது ரொம்ப வேதனை. அந்த வேதனையே அவருக்கு பின் நாட்களில் எமனாக
வந்ததோ என்னவோ? இயல்பிலேயே அப்பா தன் கஷ்ட நஷ்டங்களை யாரிடமும்
மனம் திறந்து பேசவேமாட்டார். எல்லாவற்றையும் மனதிலேயே அடக்கிக்
கொள்ளும் சுபாவம். இதுவே அவருடைய முடிவுக்குக் காரணமாக இருந்திருக்கலாம்.
அடுத்து வந்த பண்டிகைகள், தீபாவளி, திருவாதிரை, பொங்கல்
- இவை கொண்டாடப்படவில்லை என்று தெரிய வந்தது. February மாதம் அப்பா கூட வேலை செய்து கொண்டிருந்த Mr.Mehra என்பவர்
Relieve ஆகி அவரது சொந்த ஊரான
Ludhianaவிற்கே போய்விட்டதால், அவருடைய
Post ஆன தலைமை ஆசிரியர்
(Headmaster) பதவி அப்பாவுக்கு கொடுக்கப்பட்டது. இல்லாவிட்டாலும் Mehra நெடுநாட்கள் விடுமுறையில் இருந்ததால்
அப்பாதான் அந்த வேலையும் செய்து கொண்டிருந்தார். அதற்கு உண்டான
சம்பள தொகையையும் கொடுத்தார்கள். அது கிடைத்ததும் என் அப்பா
செய்த முதல் வேலை சித்தப்பா கிருஷ்ணாவிடம் வாங்கிய கடனை திருப்பி கொடுத்ததுதான்.
இந்த சம்பவம் நடந்து இரண்டு மூன்று
நாட்களுக்கு பிறகு ஒருநாள் அன்று Feb. 23ம் தேதி
1966, என் தங்கை சுசீலாவின் பிறந்தநாள். அம்மா
எங்கள் பிறந்தநாள் வந்தால் ஏதாவது Sweet பண்ணி கோவிலுக்கு அழைத்து
போவாள். அன்று அப்பாவின் School-ல் ஏதோ
Strike ஆனதால் அப்பா காலையில்
Ration வாங்கி வந்து குளித்து, சாப்பிட்டு முடித்து
கொஞ்சம் Rest எடுக்கலாம்
என்று உட்காரவும் மார்பில் திடீரென்று வலி வந்திருக்கிறது. அப்பா
உட்காரவும் நிற்பதுமாக கஷ்டப்படுவதை பார்த்த அம்மா பயந்து போய் 'என்ன ஆயிற்று' என்ன செய்கிறது என்று கேட்டிருக்கிறான்.
அதற்கு அப்பா ஒன்றுமில்லை 'நல்ல சாப்பாடு கூடவே
சாப்பிட்டுவிட்டேன் போலிருக்கு, வாந்தி வருகிற மாதிரி இருக்கு'
என்றாராம். வாந்தி எடுத்த பின்னும் மார்பு வலி குறையவில்லை.
அம்மா சுசீலாவை அனுப்பி Dr.Nityananda வை அழைத்து
வர சொன்னாள். அவர் அப்பாவின் நெருங்கிய நண்பர். உடனேயே வந்துவிட்டார். வந்ததும் அப்பாவின் வலி வேர்வை
எல்லாம் பார்த்ததுமே நிலைமை கொஞ்சம் மோசம் என்று தெரிந்துவிட்டது. உடனே அப்பாவை அசங்கவே கூடாது என்று சொல்லி, வந்தது பெரிய
Heart Attack இனி ஒரு
Attack 24 மணி நேரத்துக்குள்
வராமலிருந்தால் தான் ஏதாவது செய்ய இயலும் என்று சொல்லிவிட்டார். சித்தி, பெரியம்மா எல்லாரும் பக்கத்து வீடுகளிலேயே இருந்ததால்
எல்லாரும் கூடிவிட்டனர். பையன்கள் எல்லோரும் மருந்து வாங்கவும்,
மற்ற வேலைகளுக்காகவும் அங்கும் இங்கும் ஓடினர். கண்ணனுக்கு வயது 12. சுசீலாவுக்கு 16. இருவருமே மிகவும் சின்னவர்கள். பொறுப்பை ஏற்றுக் கொள்ளக்
கூடிய நான் டில்லியில் விதியின் விளையாட்டை பாருங்கள். அப்பாவுக்கு
வேண்டிய மருந்தும், Injections எல்லாம் கொடுத்தும் நிலைமையில்
முன்னேற்றமில்லை. கடைசியில் எமன் இரவு 3.30 மணியளவில் இன்னொரு Heart attack
ரூபத்தில் வந்து அப்பாவை கவர்ந்து சென்றான். கடைசி வரையில் என் அருமை அப்பா சுய நினைவோடு தான் இருந்தாராம்.
Iam sinking Doctor என்று டாக்டரின்
கையை பிடித்துக் கொண்டதாக என் அண்ணா சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். எத்தனை கஷ்டம் வந்தாலும் காட்டிக் கொள்ளாத என் அப்பாவின் வாயிலிருந்து அந்த
சொற்கள் வர வேண்டுமென்றால் அவர் எத்தனை கஷ்டப்பட்டிருக்க வேண்டும்.
அப்பாவிற்கு 'Serious' என்று ஒரு தந்தி எனக்கு 23ம் தேதி இரவு வந்தது.
மற்றும் என் கணவரின் Branch Manager Mr.K.L.Kohli வீட்டிற்கு வந்து செய்தி சொல்லி
மறுநாள் காலையில் புறப்பட வேண்டும் என்று வற்புறுத்தி விட்டுச் சென்றார். நிலைகுலைந்து போய் நாங்கள் காலை வண்டியில் கிளம்புவதற்காக அப்பா போன சமாசாரம்
Trunk Call மூலம் Mr.K.L.Kohli 9Manager, Orient Long Mani
Br, Delhi)க்கு தெரிவிக்கப்பட்டது. அவர்
Delhi Station வந்து என் கணவரிடமும்,
வெங்கிட்டு அண்ணாவிடமும் தெரிவித்தார். எனக்கு
ஒன்றும் புரியவில்லை. நான் அப்பாவிற்கு நல்ல படியாக குணமாக வேண்டுமே என்று எல்லா கடவுள்களிடமும் வேண்டியவாறு
ஏதோ நடை பிணம் மாதிரி வண்டிக்குள் உட்கார்ந்திருந்தேன். வண்டி
புறப்பட வேண்டிய சமயமும் வந்தது. நாங்கள் உள்ளே அமர்ந்து கொண்டோம்.
வெங்கிட்டு அண்ணா சோகமாக விடைபெற்றார். Lunch Time உஷாவிற்கும், இவருக்கும் சாப்பாடு
கொடுத்து நானும் ஏதோ சாப்பிட்டதாக பேர் பண்ணியதும் என் கணவர் மெதுவாக அப்பா போய்விட்ட
விஷயத்தை சொன்னார். தலையில் இடி இறங்கியது போல் இருந்தது.
திரும்ப திரும்ப கேட்டேன் 'அப்பாவுக்கா இப்படி'
என்று. விடை ஒரே மாதிரி இருந்தது. இப்போது 46 வருடங்கள் சென்ற பின்பும் இந்த வரிகள் எழுத
கை வரவில்லையென்றால் அப்போதைய நிலையை சற்று யோசியுங்கள். இப்போது
இருப்பது போல் பண வசதியோ, வாகன வசதியோ அப்போது எனக்கு இருந்திருந்தால்
இப்படி அப்பாவின் முகத்தை கூட பார்க்க இயலாத துர்பாக்கியம் நேர்ந்திருக்காது.
ஆனால் கொடுப்பினை என்று ஒன்று இருக்கிறது. அதற்கு
நாம் எல்லோரும் அடிமைகள்.
மூத்த ஆலமரமான என் தாத்தா சுப்ரமணிய
அய்யர் விட்டுச் சென்ற விழுதான பரமேச்வரன் தன் வாழ்க்கையைப் பூரணமாக, நியாயமாக, நீதிநெறி தவறாமல் வாழ்ந்து காட்டினார்.
அவர் நிதி எதுவும் சேர்த்து வைக்காவிட்டாலும், நல்ல பெயரையும், புகழையும் சேர்த்து வைத்தார்.
அதுவே அவர் குழந்தைகளான எங்களை இன்று வரை பல விதத்திலும் காப்பாற்றி
வருகிறது. அந்த தம்பதியர் செய்த தான தர்மமே எங்களுக்கு பல சமயங்களிலும்
உதவியிருக்கலாம் உதவி இருக்கிறது. அப்பாவின் வாழ்க்கையை இடையூறுகளுக்கிடையே
வெற்றி பெறச் செய்தது பாசம் மிகுந்த எங்கள் 'அம்மா' -
ஜானகி. ஆலமரத்திற்கு என்றுமே சரிவு கிடையாது.
விழுதுகள் அதைத் தாங்கி நிற்கும். என் அன்புமிக்க
பெற்றோருக்கு வணக்கம் தெரிவித்து விடை பெறுகிறேன்.
-ஸரோஜா
-ஸரோஜா
Subscribe to:
Posts (Atom)